பக்கம்:வெள்ளை யானை.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. பெய்யெனப் பெய்யும் மழை இந்த மழைக்கு வலியச் சென்று கோவலனை நனைக்கத் தெரியாது. கணவனுக்குத் தன்னை அபிஷேகம் செய்யத் தெரியுமே தவிர ஆரவாரத் தோடு சலசலத்து இறங்கிவரத் தெரியாது; பன்னிர்த் துறலைப் பக்குவமாகத் தெளிக்கத் தெரியாது. வயிரமணித் துரண் நீல விதானத்தில், நித்திலப் பூம்பந்தரின் கீழ்க் கால்கொண்ட இக்கன்னிமழை, எழுநிலை மாடத்தில் ஏறியிருந்து தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறிய குறியாக் கட்டுரைக்கு நாணிக் கோணி நடுக்கத்தோடு, தேன்மழையாகப் பெய்ததை அறிவோம். குலந்தரு வான்பொருட் குன்றத்தையெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/84&oldid=916369" இருந்து மீள்விக்கப்பட்டது