பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 கிறார். தெலுங்கு இலக்கியம் இவர் காலத்திலே சீரும் சிறப்பும் பெற்று வளர்ந்திருக்கிறது. அல்லசானி பெத்தண்ணா நந்திதிம்மன்னா, ராம ராஜபுஷ்னுடு, குமார துர்ஜதி, பிங்கள சூரண்ணா, முதலிய கலைஞர்கள் எல்லாம் இவரால் ஆதரிக்கப்பட்டவர்களே. சிறந்த விகட கவியாக இருந்த தெனாலிராமன் இவரது அரசவையில் இருந்து வாழ்ந்தவரே. இப்படி விஜய நகரத்தின் புகழை எல்லாம் தன் புகழாக்கிக் கொண்ட கிருஷ்ணதேவராயரது பெருமை எல்லாம் தெரிய வேண்டுமானால் அந்த சாம்ராஜ்யத் தலைநகரான ஹம்பிக்கு கட்டாயம் ஒரு நடை போய் வரத்தான் வேணும். இன்று அங்கு சிதைந்து கிடக்கும் சின்னங்களை வைத்தே, அன்று அந்தத் தலைநகரம் எவ்வளவு உயர்ந்த தாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கவும் முடியும். ஹம்பிக்கும் ஹாஸ்பெட்டிற்கும் வந்தது தான் வந்தோம் நடையைக் கொஞ்சம் எட்டிப் போட்டு ஹாஸ்பெட்டிற்கு மேற்கே மூன்று மைல் தூரத்தில் உள்ள துங்கபத்திரை அணையையும், பார்த்துவிட்டேதிரும்பலாம். பிரம்மாண்ட மான அணையின் இருமுனையிலும் இரண்டு பிரயாணிகள் விடுதிகளைக் கட்டியிருக்கிறார்கள், அணை கட்டிய இஞ்சினியர்கள். அவர்களில் ஒருவர் அய்யராகவும் மற்றொருவர் அய்யங்காராகவும் இருந்த காரணத்தால் ஒன்றைக் கைலாயம் என்றும் மற்றொன்றை வைகுண்டம் என்றும் பெயரிட்டிருக்கிறார்கள், ஆம்: கைலாயத்திலும் வைகுண்டத்திலும் சென்று தங்கியிருக்க வசதியும் செய் திருக்கின்றார்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு நாமும், அங்குள்ள அதிகாரிகளின் தயவு பெற்று ஒரு நாளாவது தங்கி, துங்கடத்திரை அணையையும் நன்றாகப் பார்த்துவிட்டே திரும்புவோமே.