இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வடஆற்காடு மாவட்டத்திலே காவேரிப்பாக்கம் என்னும் ஊருக்குத் தென்புறத்திலே ஒரு ஊர். அந்த ஊர் திருப்பாற்கடல் என்று விளங்குகிறது. இந்த ஊரில் கோயில் கொண்டிருப்பவன் பிரசன்ன வேங்கடேசன் அந்தப் பிரசன்ன வேங்கடேசனைப்பற்றி ஒரு சுவையான கதை. கதை இதுதான். பழைய காலத்திலே புண்டரீக மகரிஷி என்று ஒரு முனிவர், அவரது வழிபடு தெய்வம் மகாவிஷ்ணு. அது