பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 ஒருபால், தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே ! - என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! என்று தானே பாடுகிறார் நமது கோயிலில் நாம் எப்படி வணங்க வேண்டும் என்பதையும் இவர் எளிதாக சொல்லி யிருக்கிறாரே. இதைக் குறைகூறவோ அல்லது ஏளனம் செய்வதோ சரியல்ல. அமைச்சரவர்கள் செய்த சிறு தவறு என்னவென்றால், நமது கோயில்களையும் மசூதி களையும் சர்ச்சுகளையும் ஒரே நிலையில் வைத்து நோக்கியதுதான். மசூதிகளும், சர்ச்சுகளும் வெறும் பிரார்த்தனைக் கூடங்களாகத்தான் அமைகின்றன. அங்கு மூர்த்திகள் இல்லை. பூசனை கிரமங்கள் இல்லை. ஆதலால் வழிபாட்டு முறையில் வேறுபட்டிருக்கிறது. இரண்டையும் இணைத்துப் பேசியிருத்தல், கூடாதுதான் என்று பணிவாகவே தெரிவித்துக் கொண்டேன். உண்மை தானே? முஸ்லீம்களின் மசூதிகள் எல்லாம் நல்ல பிரார்த் தனைக் கூடங்கள். நமது வடநாட்டு யாத்திரையில் நாம் எத்தனை எத்தனை இந்து கோயில்களைப் பார்க் கிறோமே, அத்தனை அத்தனை மசூதிகளையுமே பார்க்கப் போகிறோம். பன்னிரண்டாம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு வர்ை முஸ்லீம்களின் ஆட்சி இந்தியாவில் நிலைத்திருக்கிறது. அ வ ர் க ள து கலாச்சாரத்தை சார்சானிக் என்று கலை விமர்சகர்கள் கூறுகிறார்கள். கட்டிடக் கலையில், எகிப்தியகலை, கிரேக்கர் கலை, ரோமர்கலை, கோதிக்கலை என்பதுபோல