பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 தின் அழகு, அதிசயம் எல்லாம் அக்கட்டிடத்தின் மேல் 125 அடி குறுக்களவு உள்ள ஒரு வட்ட வடிவமான டோம்' தான். இந்த டோம் மாத்திரம் 30 அடி உயரம், கட்டிடத் தின் மொத்த உயரம் 200 அடி. இந்த டோமே உலகத் தில் உள்ள டோம்களில் எல்லாம் பெரியது என்கிறார். இதற்கு அடுத்ததாக நிற்பதுதான் ரோமாபுரியில் உள்ள பாந்தியன் மண்டபத்து டோம் என்றும் கணக்கிட்டிருக், கிறார்கள். இந்த டோமில் இன்னும் ஓர் அதிசயம். டோமின் அடிப்பாகத்தில் 11 அடி அகலத்தில் டோமைச் சுற்றி வரப் பாதை அமைத்திருக்கிறார்கள். அந்தப் பாதையில் ஒரு பக்கத்தில் நின்று கொண்டு மெதுவாகப் பேசினாலும் 125 அடிக்கு அப்பாலுள்ள எதிர்ப் பக்கத்தில் தெளிவாகக் கேட்கிறது. இன்னும் இங்கு ஒரு இடத்தி விருந்து உரக்கக் கத்தினால் எட்டு இடங்களில் அதன் எதிரொலி கேட்கிறது. இதனையே குசுகுசு சுற்றுச் Grana (Whispering Gallery) erdirsteirpsmrti. இந்த கோல்கும்பஸ் கட்டிடத்தின் மத்தியில் ஒரு பீடம். பீடத் தின் கீழே பூமிக்குள்ளே பல நிலவறைகள், இந்த, கோல்கும்பஸ் என்ற கட்டிடத்தை காண்பதற்காகவே ஒரு நடைபோகலாம். இந்த ஊருக்கு கோல்கும்பஸ் மண்டபத்திற்கு எதிரேயுள்ள கட்டிடத்தை ஒரு கலைக் காட்சியாக இன்று வைத்திருக்கிறார்கள். அங்கு பழைய காலத்து நாணயங்கள். கத்திகள், கேடயங்கள் முதலிய போர்க் கருவிகள் எல்லாம் வைத்து இருக்கிறார்கள். இன்னும் எத்தனை எத்தனையோ பழங்காலத்துப் பொருட்கள் எல்லாம் இருக்கின்றன. அவகாசம் உடைய வர்கள் எல்லாம் ஆற அமர இருந்து இவைகளைப் பார்த்து ஆராய்ச்சி செய்யலாம். - கோல்கும்பஸ் மண்டபத்திற்கு அடுத்த படியான பெரிய கட்டிடம் ஜும்மா மசூதிதான். இதைக் கட்டியவர் முதலாம் அலி என்பவன். விஜகநகர மன்னனான ராம்ராஜ் என்பவனை முறியடித்து வெற்றி கண்டதின் ஞாபகார்த்த