பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 லேயே பவானிபேட் சென்று அன்னை பவானியை வணங்கி விடுவோம். இந்தப் பகுதிக்கு ஆதியில் போர்பன் என்ற பெயரே இருந்திருக்கிறது. பவானியின் கோயில் கட்டப்பட்டப் பின்னரே பவானிபேட் என்ற பெயர் நிலைத்திருக்கிறது. அன்னை பவானியின் கோயில் ஒரு குறுகிய சந்தில் சிறிய கோயிலாகவே இருக் கிறது. அங்கு கோபுரமோ, கோபுர வாயிலோ ஒன்று மில்லை. கோயில் எல்லாம் ஒட்டுக்கூரை வேய்ந்ததே. ஒரு சிறு கருவறை, அதற்கு முன்னால் பக்தர்கள் நின்று தொழ மரத்துரண்கள் தாங்கும் கூரையோடுகூடிய ஒரு மண்டபம். அன்னை பவானி நல்ல கருநிறம் உடையவ ளாக இருக்கிறாள். அவள் கருவறையைச் சுற்றிவர ஒருவழி வகுத்திருக்கிறார்கள். அந்த வழியில் ஒரு கல்நடப் பட்டிருக்கிறது. பவானியிடம் பிரார்த்தனை செய்து கொள்பவர் அக்கல்லைத் தழுவி தங்கள் தங்கள் பிரார்த்த னையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இக்கோயிலில் வந்து வணங்கி அன்னை பவானியின் அருள்பெற்றுத்தான் சத்ரபதி சிவாஜி அரிய பெரிய காரியங்களை எல்லாம் செய் திருக்கிறார். அவனுடைய புகழுக்கும் கீர்த்திக்கும் ஏற்ற வண்ணம் இக்கோயிலில் இன்றளவும் ஒரு பெரிய கோயி லாக உருவாகவில்லைதான். பவானிபேட் அன்னை பவானியைத் தரிசித்தபின் கஸ்பாபேட் சென்று அங்கு சிவாஜியின் தாயான ஜிஜாபாய் அம்மையாரால் கட்டப்பட்ட மகா கணபதி கோயிலிலும் நம் வணக்கத்தைச் செலுத்தலாம். மராத்தியர்களுக்கு மகா கணபதியிடம் அளவுகடந்த பக்தி. செவ்விய வண்ணத்திலே சிறியதும் பெரியதுமான கணபதி வடிவங்கள் பலவற்றை உருவாக்கி வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு கோயின் வாயில் கவுதத்திலுமே சிறிய மகாகணபதி வடிவம் இருக்கும். கஸ்பாபேட்டில் உள்ள கணபதி சுயம்பமூர்த்தி என்கின்றனர். ஆதியில் மாடுமேய்க்கும் சிறுவர்கள் கற் பாறை ஒன்று கணபதியின் வடிவில் இருப்பதைக்கண்டு