பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 செய்து கொள்பவரது பிரார்த்தனையையெல்லாம் நிறை. வேற்றி வைக்கிறாள். இப்படி இக்கோயில் கட்டப்பட்ட தெல்லாம் கி. பி. 1761-ல் தான் என்றும் அறிகிறோம். இந்த மகாலக்ஷ்மியின் சந்நிதிக்கு குஜராத்தின் பணியாக்கள்: பிராமணர்கள், சமண சமயத்தினர் முதலிய எல்லோரும் வந்து வணங்கிச் செல்கிறார்கள். தங்களுடைய செல்வ. வளம் பெருக வேண்டும் என்று பிரார்த்தனை செய்யாதவர் கள் யார்தான் இருக்கிறார்கள். இந்த மகாலசு:மி கோயிலுக்கு தென்புறம் கொஞ்ச தூரத்தில்தான் பிரசித்தி பெற்ற மலபார் ஹில் என்னும் பிரதேசம் இருக்கிறது. அந்த மலைப்பகுதியின் சரிவிலே, அமைந்திருப்பதுதான் தொங்கு தோட்டம், அத்தோட்டம் மிகவும் ரமணியமாக இருக்கும். அங்கிருந்து பம்பாய் நகரம் கடற்கரை எல்லாவற்றையுமே கண்ணோட்டமிடலாம். தோட்டத்தில் உல்லாசமாகச் சுற்றிவரும்போது, கொஞ்ச அடர்ந்தது.ாரத்தில் கழுகுகள் வட்டமிட்டுக் கொண்டிருக் கும் புதர்களுக்கு இடையே ஒரு வெள்ளைக் கட்டிடமும் தோன்றும். அது என்ன கட்டிடம் அங்கு ஏன் கழுகுகள் சுற்றுகின்றன என்று விசாரித்தால் ஒ ரு அதிசயமான செய்தியை அறிவோம். பம்பாயில் பார்சி வகுப்பினர் நிறைய இருக்கின்றனர். அவர்கள் அக்கினியையே தெய்வ மாக வணங்குபவர்கள் அவர்களில் யாராவது இறந்தால் அந்த உடலை தகனம் செய்வதில்லை. பூமியில் புதைப்பதும் இல்லை. பினமான உடலை எடுத்துச் சென்று நாம் பார்த் தோமே கட்டிடம், அந்த இடத்தில் வைத்துவிட்டு திரும்பி விடுகின்றனர். உயிரற்ற அந்த உடலை,கழுகுகள் கொத்தி தின்கின்றன. உபயோகமற்றது என்று க ருது ம் இந்த உடலும் பின்னர் கழுகுகளுக்காவது உணவாகட்டுமே என்ற பரோபகார எண்ணமே இப்படிச் செய்யத் தூண்டி யிருக்கிறது. அவர்களை இப்படி உயிரற்ற சடலங்களைக் கொண்டு வந்து போடும் இடம்தான் மெளன ஸ்தம்பம் என்ற பெயரோடு விளங்குகிறது. பார்சிமக்கள், நேற்றிருந்: