பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தார் இன்று வெந்து நீறானார் என்றோ, மண்ணிற் பிறந் தார் மீண்டும் மண்ணுக்கே இறையானார் என்றோ சொல்ல வாய்ப்பு அற்றவர்கள்.இந்த மெளனஸ் தம்பத்தை எட்ட இருந்து பார்த்துவிட்டே மலபார்ஹில்லிருந்து கீழே இறங்கலாம். பின்னர் நகருக்கு வரும் வழியில் செளபாத்தி பகுதியில் ஒரு கோயில், அது சிவன்கோயில், அதனை பாபுல்நாத் கோயில் என்கின்றனர். அன்று ஆவின் கீழிருந்து அறம் சொன்ன பெருமான் இங்கும் ஒரு பெரிய ஆலமரத்தடியில் கோயில் கொண்டிருக்கிறார். இக்கோயில் ஒரு செங்குன்றின் மேல் கட்டப்பட்டு இருப்பதால் பல படிகளை ஏறிக் கடந்தே கோயிலுக்குச் செல்ல வேண்டும். கோயிலை ஒரு நீண்டுயர்ந்த விமானம் அழகு செய்கிறது. ஆதியில் இது ஒரு அடர்ந்த காடாக இருந்திருக்கிறது. அங்கு சுயம்புலிங்கமாக ஒரு மூர்த்தி இருந்திருக்கிறார். அக் காட்டிற்குச் சென்ற பசுக்கள் தானாக பாலைச் சொறிந் திருக்கிறன, அந்த லிங்க மூர்த்தியின் மேல். அதன் பின் தான் அவரை வெளிக்கொணர்ந்து கோயில் கட்டி வணங்கி யிருக்கின்றனர் மக்கள். இன்று கோயில் முழுவதுமே சலவைக் கல்லால் கட்டப்பட்டிருக்கிறது. படிகள் ஏறிய தும், விநாயகரும் ஹனுமானும் நமக்கு தரிசனம் தருகின்ற னர். மகாமண்டபத்தைக் கடந்து கருவறை வாயில் வந் தால் அங்கு வி ந | ய க ரு ம் காளியுமே துவார பாலகர்களாக நி ற் கி ன் ற ன ர். க ரு வ ைற யி ன் நடுவில் பாபுல்நாத் லிங்க உருவில் இருக்கிறார். அவருக்குப் பின்னால் மூன்று மாடக்குழிகள். நடுமய்ய முள்ள குழியில் பார்வதி இருக்கிறார். வலப்பக்கத்துக் குழியில் சிவபார்வதி வடிவங்கள் இருக்கின்றன. பிள்ளைப் பிராயத்தில் உள்ள பிள்ளையார் தந்தையின் மடியில் தவழ்ந்து விளையாடிக் கொண்டு இருக்கிறார். இடப் பக்கத்தில் காளிகாதேவி இருக்கின்றார். எல்லோரையும் வணங்கிவிட்டு கோயிலை வலம் வந்து படியிறங்கலாம். இனி நாம் கிழக்கு நோக்கி மிக்க நெருக்கமான பகுதி யான பம்பாய் பசாருக்கே வரலாம். அந்த நெருக்கடிக்கு