பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடகாட்டுக் கோயில்களைச் சுற்றி ஒருநாட்டு மக்களின் உள்ளப்பாங்கை அறிய வேண்டும் என்றால் அந்த நாட்டின் இலக்கியங்களைத் தான் புரட்ட வேண்டும். இலக்கியங்களுக்கு அடுத்த படியாக அம்மக்களின் வாழ்வை அறிய அந்நாட்டில் வளர்ந்த கலைகளைப் பற்றி ஆராய வேண்டும். அதிலும் அந்த நாட்டின் கட்டிடக்கலை அம்மக்களின் இதயத்தின் போக்கை எல்லாம் தெளிவாகப் புலப்படுத்தும் என்று கூறுவர் அறிஞர். மக்களின் உணர்ச்சிப் பெருக்கு, அவர் களுடைய ஆசாபாசங்கள் எல்லாம் கல்லிலும், செம்பிலும், மண்ணிலும், மனலிலும் பொதிந்து கிடக்கக் காண்போம். இந்த அடிப்படையில்தான் நம் நாட்டுக் கோயில்களைப் பற்றி நாம் ஆராய வேண்டும். நம் இந்திய நாட்டைப் பொறுத்தவரையில் நம் நாட்டுக் கலைகள் எல்லாம் சமயச் சார்புடையவைகளாகவே வளர்ந்திருக்கின்றன. அவர் களது சமயமும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள ஆலயங் களோடு பின்னிப் பிணைந்தே கிடப்பதையும் நாம் அறிவோம். ஜீவாத்மா பரமாத்மாவோடு ஒன்றி நின்று இரண்டறக் கலந்து நிற்கிற நிலைமையை நம் நாட்டுக் கோயில்கள் உருவகிக்கின்றன-என்று சொன்னால் அது மிகை அன்று. உலக வாழ்விலே மயங்கித் தாழ்ந்து கிடக் கின்ற மனிதன் மேல் உலகில் உள்ள இறைவனை நோக்கி உயர எண்ணுவது போலவே, நம் நாட்டுக்கோயில் கோபுரங்கள் விண்ணை நோக்கி உயர்ந்து கொண்டே செல்கின்றன. ஆம், நம் கோயில் கோபுரங்களை விண் வழி காட்டும் விரல்கள் என்று கூடக் கூறலாம் நான் தமிழ் நாட்டுக் கோயில்களில் பலவற்றை நேரில் சென்றுகண்டவன். ஆம். தமிழ் நாடு முழுவதும் எண்ணிறந்த 27 38– 1