பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í Í உடையவை. இவை எல்லாம் தமிழனது கலை உணர்வுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவையல்லவா? இப்படித் தமிழ் நாட்டுக் கோயில்களாம் கலைக்கூடங் களையே இருபது வருஷ காலமாகச் சுற்றி வந்த எனக்கு வேங்கடத்திற்கு அப்பால் உள்ள நமது வடநாட்டுக் கலைக் கோயில்களையும் காணவேண்டும் என்ற ஆசை உள்ளத்தில் நீண்ட நாளாக இருந்து வந்தது. அந்த ஆசையை நிறைவேற்றவும், அந்த ஆசை நிறைவேறுவதன் மூலம் வடநாட்டுக் கோயில்களைப் பற்றி அங்கு செல்ல வாய்ப்பில்லாத தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறவும் விரும்பியே சென்ற வருஷம் நான் எனது வடநாட்டு யாத்திரையைத் தொடங்கினேன். கோவையிலிருந்து தொடங்கிய இந்த யாத்திரையில் இரண்டு கோவை அன்பர்கள் துணை வந்தனர். யாத்திரை முழுவதும் காரிலேயே சென்றோம். கிட்டதட்ட பதினாயிரம் மைல்களை மூன்றுமாத காலத்தில் முடித்து ஊர் திரும் பினோம். அது ஒர் அரிய அனுபவம்கூட. நம் நாட்டில் உள்ள சாலைகளைப் போல் வடநாட்டுச் சாலைகள் இல்லை. பல நதிகளைக் கடக்கப் பாலங்கள் இல்லை. சில இடங்களில் காரைப் படகுகளில் ஏற்றியே ஆற்றைக் கடக்க வேண்டி யிருந்தது. ஒர் இடத்தில் ரயிலின் கூட்ஸ் வண்டியில் ஏற்றியே தண்ணிர் இல்லாது மணல் மட்டும் நிறைந்திருந்த ஆற்றைக் கடக்க வேண்டி வந்தது. வடநாட்டு யாத்திரை செல்ல விரும்பும் அன்பர்கள் காரில் செல்லுதல் கூடாது. காரில் செல்வதில் பல வசதிகள் உண்டு என்றாலும் சிரமங் களும் பலப்பல, என்றாலும் தலங்களை எல்லாம் ஆற அமர இருந்து காண இப்படிச் சென்றதே துணை புரிந்தது என்பதையும் உணர்கின்றேன். இனி, இந்த வடநாட்டு யாத்திரையில் நான் கண்ட கலைக்கோயில்கள் ஒரு சிலவற்றை மட்டும் கூறிவிட்டு நின்று கொள்கிறேன். தமிழ் நாட்டை விட்டுக் கிளம்பியதும் நாம் முதல் முதல் செல்வது மைசூர் ராஜ்ஜியமே. அந்த