பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 என்ன ஏதோ சமணர் கோயில்களைக் காட்டுவதாகச் சொல்லி விட்டு, ஒரு கண்காட்சி சாலையை வர்ணித்துக் கொண்டிருக்கிறீரே என்று தானே கேட்கிறீர்கள். சரி. விறு விறு என்று நடந்து வாருங்கள் என்னுடனே. நகரத்தின் பிரதான பாகத்திற்கே செல்லலாம். இந்த நகரத்தில் பதினான்கு சமணக் கோயில்கள் இருக்கின்றன. ஒன்றே ஒன்று தான் ஊருக்கு மேல் புறத்தில் ஓர் ஒதுக்கமான இடத்தில் இருக்கின்றது. மற்றவை எல்லாம் நகரின் மத்தியிலேயே இருக்கின்றன. இந்த பதினான்கு கோயில் களையும் பார்க்க நமக்கு அவகாசம் இராது. ஆதலால் அங்குள்ள சாந்திநாதர் கோயில், சோரிவார் கோயில், சேட் மந்திர் என்னும் மூன்று கோயில்களை மட்டும் பார்த் தால் போதும், சாந்திநாதரைப் பதினாறாவது தீர்த்தங் கரர் என்று சொல்கிறார்கள். அங்கு சாந்திநாதரும் நேமி நாதரும் கோயில் கொண்டு இருக்கிறார்கள். கருவறை, வாயில் எல்லாம் வெள்ளித்தகடு பொதிந்து வைக்கப் பட்டிருக்கின்றது. கட்டிடம் முழுவதும் பளிங்கு-சலவைக் கற்களாலேயே கட்டப்பட்டிருக்கின்றது. மரம் மிகக் குறை வாகவே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இக்கோயில் சுவர்களில் எல்லாம் சலவைக்கல் சித்திரங்கள். எல்லாம். மகாவீரரது போதனையை விளக்க எழுந்தவைகளே. அவை களில் ஒரு சிற்பம்- அர்த்த சித்திர வடிவில் அமைந்த அந்த சிற்பம் விளக்கும் வரலாறு சுவையாக இருக்கிறது. ஒரு மனிதனை புலி ஒன்று துரத்தி வருகிறது. அந்தப் புலிக்குப் பயந்து மனிதன் பக்கத்தில் இருந்த மரத்தில் ஏறுகிறான், மரத்தில் ஒரு கிளையைப் பற்றித் தொங்குகிறான். அந்தச் சமயத்தில் மரத்தில் உள்ள ஒரு எலி இவன் தொங்கிக் கொண்டிருக்கும் விழுதைக் கடிக்கிறது. மனிதன் கீழே விழு. கின்ற நிலையில் இருக்கிறான். கீழே விழுகிற இடத்தில் ஒரு பாம்பு சீறிக்கொண்டு நிற்கிறது. துரத்தி வந்த புலியுமே ஒரு பக்கத்தில் விழுகின்ற மனிதன் பேரில் பாயத் தயாராக இருக்கிறது. இந்த நிலையில், மரத்தில் கட்டியிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் சொட்டுகிறது. அந்த அபாயகரமான