பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

339 சலவைக் கல்லில் தஞ்சை மாவட்டத்தில் தென்னை கிடுகு களை வைத்து அலங்கார மணப்பந்தல் இடுவார்கள். அதில் தங்கள் கைத்திறனை எல்லாம் காட்டுவார்கள் கலைஞர்சள். ஆம். எல்லாம் ஒலையில்தான். அவற்றை எல்லாம் தூக்கி அடிக்கும் வகையில் சலவைக்கல்லில் விதானம். அந்த விதானத்தில் சரஸ்வதி, லக்ஷ்மி போன்ற வடிவங்கள். இன்னும் படிப்படியாகத் தொங்கிக்கொண் டிருக்கும் லஸ்தர் குளோப்புகளைப் போல சலவைக் கல் லிலே செய்யப்பட்டிருக்கும். இவைகளை எல்லாம் பார்த், துப் கல்லைக்கணியாக்கும் சிற்பிகள், வெண்ணெய்யையே பொருளாகக் கொண்டு இப்படி செய்திருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றும். அத்துனை தூயவெண்மையான சலவைக் கற்களால் ஆக்கப்பட்டிருக்கும் மண்டபம், அது ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் சலவைக்கல் கனவு என்றால் இது சலவைக்கல் நனவாக அமைந்திருக்கிறது. இந்த மண்டபத்தினை கடந்துதான் ஆதிநாதர் இருக்கும் கருவறை. ஆதிநாதர் அத்தனை அழகானவர் அல்லதான். என்றாலும் அற்புதக் கோயிலின் கருவறை உள்ளே அல்லவா அவர் இருந்து கொண்டிருக்கிறார். அந்த கருவறையின் முகப்பிலே ஒரு சிறு மண்டபம் பல துரண்கள். தூண்கள், விதானம், எல்லாம் சிற்பவேலைகள் நிறைந்த சலவைக் கற்களால் ஆனவைதான். இக்கோயிலை விட்டு வெளியே வந்தால் வாயிலில் ஒரு சிறு கோயில். அதனை ஹத்திகானா என்று அழைக் கின்றனர். அங்கு பத்து யானைகள் ஆம் எல்லாம் சலவைக் கல்லால் ஆனவை தாம், இருக்கின்றன. இவற்றிற்கு எல் லாம் நடுநாயகமாய் ஒரு பெரிய யானை மீது ஏறி இருப் பவர்தான் விமலாஷாவின் வடிவம் என்பர். ஆம் அவருமே. சலவைக்கல்லில் உருவானவர்தான். இந்த டில்வாடா என்னும் பகுதியில் இருக்கும் ஜைனக் கோயில்கள் இன்னும் நான்கு என்றாலும் அதில் முக்கிய மானது ஒன்றே ஒன்றுதான். அதுதான், லூனவாசிகி,