பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f73 அவுரங்கசீப்பால் இழக்கப்பட்டுத் திரும்பவும் 1809-ல் கோகுல் சந்த்ரேபக் என்பவரால் புதிதாகக் கட்டப் பட்டிருக்கிறது. இந்திய நாட்டில் பிரம்மாவிற்கு என்று. தனி கோயில்கள் அதிகம் இல்லை. ஆதலால் இங்குள்ள பிரம்மா கோயில் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இங்கு நான்கு முகத்தோடு கூடிய பிரம்மாவின் சிலை ஒன்று: இருக்கிறது. ஒருபுறம் காயத்ரியும், ஒருபுறம் சாவித்திரியும் இருக்கிறனர். கோயில் கோபுரத்திற்கு அருகில் ஜனகாதி முனிவரது சிலைகள் இருக்கின்றன. புஷ்கரத்தில் யக்ஞ. குண்டத்திற்கு அருகே அகத்தியர் ஆசிரமம் இருக்கிறது. இந்த இடத்தில்தான் ராமலட்சுமணர்கள் தீர்த்தமாடி னார்கள் என்கின்றனர். அகலிகை சாபவிமோசனமும் இங்குதான் நிகழ்ந்திருக்க வேண்டும். புஷ்கரத்தில் எல் லோருமே நல்ல சைவர்கள். புலால் உண்பவர்களைக் காண்பது அரிது. அந்த நகரத்தின் எல்லையில் எந்த மிருகத் தையும் கொல்லுதல் கூடாது என்பது அனுஷ்டிக்கப்படும் சட்டம். இ ன் னு ம் தேவகுருவாகிய பிரஹஸ்பதி பிரம்மாவை நோக்கித் தவம் புரிந்து தனக்கு புஷ்கரத்தில் கிரகாதிபத்யம் வேண்டியிருக்கிறான். , அந்த வரம் கொடுக்கப்படுகிறது. ஆதலால் குரு வந்து பன்னிரண்டு ராசிகளிலும் தங்கும்போது ஒரு பெரிய மேளாவே நடக் கிறது அங்கே. இதுதான் புஷ்கரத்தில் பன்னிரண்டு. வருஷங்களுக்கு ஒரு தரம் நிகழும் பெரிய விழா, ஆம் கும்பகோணத்தில் நடக்கும் மகாமகத்தைப் போல. இத்தலத்தில் சிவபெருமானுக்கும் ஒரு கோயில் இருக் கிறது. அங்குள்ள சிவபெருமானை அடமடேஸ்வரன் என்று அழைக்கின்றனர். இன்னும் இங்கு விஷ்ணுவிற்கு மூன்று கோயில்கள் இருக்கின்றன. அவைகளில் இரண்டு புராதனமானவை, ஒன்று சமீப காலத்தில் கட்டப்பட்டது. புராதனமான கோயில் ஒன்றில் ரங்கநாதன் இருக்கிறார். இன்னொன்றில் வராகமூர்த்தி மூலவராக நிற்கிறார். பூரீதேவியும் பூதேவியும் பக்கத்தில் இருக்கின்றனர்,