பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39? தினவிழாவும் குருதேஜ் பஹதூர் அமரரான தினமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் குருத்துவாரா எல்லாவற்றையும் கடந்துதான் சமணர்கள் கோயிலான பூரீ திகம்பர் கோயிலுக்கு வர வேண்டும். டில்லியில் சமணக் கோயில்கள் முப்பத்தைத் திற்கு மேல் இருந்தாலும் இதுதான் அவர்களது பிரதான கோயில். சிறப்பான கட்டிடக்கலைக்கு எடுத்துக் காட்டாக இக்கோயில் விளங்காவிட்டாலும், அதனுடைய கிழக்கு வாயிலும், பொன்போர்த்த ஸ்தூபிகளும் மிக மிகஅழகாயி ருக்கின்றன. அங்குள்ள பிரதானகோயிலில்கோயில் கொண் டிருப்பவர் பார்சவநாதர். அவரே மகாவீரருக்கு முந்திய தீர்த்தங்கரர் என்பர். இக்கோயிலுக்குள் பல சிறு கோயில் கள் இருந்தாலும் சிறப்பான கோயில்,எட்டாவது தீர்த்தங் கரர் என்று கருதப்படும் சந்திரபிரபுவின் கோயில்தான் முக்கியமானது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டிலிருந்து இக் கோயில் 1528-ல் கட்டப்பட்டது என்று அறிகிறோம். இங்கு தான பறவைகளின் ஆஸ்பத்திரி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. எவ்வுயிர்க்கும் அன்பாயிரு என்று சமண சித்தாந்தத்தைச் செயல்களில் காட்டக்கூடிய வகையில் ஆயிரக்கணக்கான பறவைகள் இங்கு சிகிச்சைக்கு வரு கின்றன. தினசரி ஆயிரத்துக்கு மேற்பட்ட பறவைகளுக்கு இங்கு சிகிச்சை செய்யப்படுகின்றன. உடல் நலம் பெற்ற பறவைகள் விடுதலை பெற்று பறந்து செல்வது அழகான காட்சி. உலகிலேயே பறவை ஆஸ்பத்திரி ஒன்று இவ்வளவு சிறப்பாக வேறு;இடங்களில் நடக்கவில்லை. என்கின்றனர். இக் கோயிலில் நடக்கும் பெரிய திருவிழா தசலட்சமி விழா தான். டில்லித் தண்லநகரிலே நடக்கும் பெரிய திருவிழாக் களில் இதுவும் ஒன்று. பல தரப்பட்ட படை எடுப்புகளுக்கும் இடிபாடுகளுக்கும் இடையில் நானுாறு வருஷங்களாக இங்கு பூசை ஒழுங்காக நடக்கிறது என்றால் அது சிறப்பானது தானே.