பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 இந்த வட்டாரத்திலே சமீப காலத்தில் எடுக் கப்பட்ட நரசிம்மர் ஆலயம் ஒன்றும் உண்டு. சாந்தினி செளக்கில் பல திறப்பட்ட கடைகளும் உண்டு. டில்லி மிட்டாய்கள் என்று பிரபலம்ான மிட்டாய்களைக் ருசிபார்க்க வேண்டுமானால் மேற்கு நோக்கி நடந்து கண்டேவாலா கடைக்கு வந்து சேர வேண்டும். அங்குதான் சர்க்கரையைக் கொண்டு என்ன என்ன பலகாரம் செய்யலாமோ அத்தனையும் செய்து வைத்திருக்கிறார்கள். நூறுக்கு மேற்பட்ட வகையில் அங்கு பலகாரங்கள் உண்டு. எதை வாங்குவது, எதை வாங்கா மற். விடுவது என்று புரியாமல் திணறி விடுவோம். பல்பெரும் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்து நிற்கிறான் இறைவன் என்பான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அதே போல் சாக்கரைப் பல்வேறு வடிவில் மிட்டாய்களாக உருவெடுத்திருக்கும் இங்கே. இந்த சாந்தினி செளக் பிரதேசத்திற்கும் மேற்கு பக்கத்தில் தான் கரோல்பாக் என்னும் பகுதியிருக்கிறது. டில்வி வாழ் தமிழ் மக்கள் எல்லாம் இங்குதான் வசிக் கின்றனர். எப்படி பம்பாயில் மாதுங்கா பகுதியிருக்கிறதோ அப்படியே டில்லியில் கரோல்பாக் இருக்கிறது. அங்குள்ள தமிழ் அன்பர்களைக் கண்டு அளவளாவிவிட்டு, அங்குள்ள தென்னிந்திய ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றால், சாம்பார் ரளத்துடன் நம் நாட்டுச் சாப்பாடு கிடைக்கும். பழைய டில்லியில் நிரம்பக் சுற்றி விட்டோம். டில்லி சர்வகலா சாலை, மலேரியா ஆராய்ச்சிக்கூடம் எல்லாம் செல்வதென் றால் நமக்கு அலுப்புத் தட்டி விடும். ஆதலால் தமிழர் வசிக்கும் இந்த கரோல்பாக் பகுதியிலேயே இன்று தங்கி, நாளை புதுடில்லியினைப் பார்க்கப் புறப்படுவோம்.