பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 நஞ்சுண்டேஸ்வரரைத் தரிசிக்கலாம். இவரை பூர் கண்டே ஸ்வரர் எனவும் அழைக்கின்றார்கள். இன்றைய நாகரீக உலகில் நடப்பதுபோல, நஞ்சுண்ட கண்டேஸ்வரர் என்ற பெயர் நீளமாக இருப்பதால் பெயரை பூரீகண்டன் என்று சுருக்கி வைத்துக்கொண்டார் போலும். இவருக்கு படைக் கும் நைவேத்தியத்தில் சிறப்பானது சுகண்டித சர்க்கரை. இது என்ன என்று பார்க்கவும் அதன் சுவையை அறியவும் ஆவலாயிருக்கும். கொஞ்சம் சலுகை உடையவர்கள் என்றால் கேட்டுப் பெறலாம். சுக்கு, சர்க்கரை. வெண்ணெய் மூன்றையும் கலந்து வைத்திருப்பதே சுகண்டித சர்க்கரை. அன்று அவர் உண்ட நஞ்சு கண்டத் திலேயே நின்றுவிட அதை ஜீரணிக்கவே இப்படி சர்க்கரை யையும் வெண்ணையையும் சுக்கையும் சேர்த்துக் கலந்து உண்டு வருகிறார் போலும் ! நஞ்சுண்ட பூரீகண்டனைத் தரிசித்து விட்டபின் அண்னையின் சந்நிதிக்கிச் செல்லலாம். அண்னையைப் பார்வதி என்றே அழைக்கின்றனர். அன்னை சர்வாலங்கார பூஜிதையாகவே இருக்கின்றாள். அவள் அணிந்திருக்கும் நகைகளின்மதிப்பு ஒரு கோடி.ரூபாய் என்கின்றர்.அத்தனை நகைகளையும் மூல அம்பிகைக்கே சாத்தி வைத்திருக் கிறார்கள். இதனைப்பார்த்த பின்தான், இந்தக் கோவி லுக்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பெல்லாம் ஏன் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த அன்னையின் சந்நிதிக்கு வடபுறம் ஒரு சிறு கோயிலுள் ஒரு லிங்கம் பிரதிஷ்டையாகியிருக்கிறது. இதனை மரகத லிங்கம் என்றும் ஹைதர் லிங்கம் என்றும் அழைக்கின்றனர். மைசூரை ஹைதர் அலி ஆள்கிறபோது அவனுடைய பட்டத்து யானை குருடாகியிருக்கிறது. அவர் பிரார்த்தித் துக்கொண்டபடி நஞ்சுண்டேஸ்வரர் அந்த யானையின் குருட்டை நீக்கியிருக்கிறார். அதற்காக ஹைதர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது என்று வரலாறு கூறுகிறது.