பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 அன்னைக்கும் அத்தனுக்கும் இடையிலே ஒரு சந்நிதி. அந்தக் கோயிலில் நாராயணன் நிற்கிறார். இவனையே. தேவ தேவன் என்கிறார்கள். தேவர்கோ அறியாத தேவ தேவன் என்ற பெயர்தான் எவ்வளவு இனிமையாக இருக் கிறது. இவர் கோயிலுக்குப் பின்னே சண்டீசர் சந்நிதி இருக்கிறது. அந்தச் சந்நிதிக்கு மேலே உள்ள மண்டபத்தில் ஒரு வில்வமரம் தழைத்து ஓங்கி வளர்ந்திருக்கிறது. அதன் மூலம் எங்கிருக்கிறது என்று அறிய முடியவில்லை. இந்தக் கோயிலின் முக்கியமான திருவிழா ரதோத்ஸ்வம் தான். கோயிலின் வடபக்கத்தில் உள்ள காலி இடத்தில் தேரை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ரதம் நீண்டு வளர்ந், திருக்கிறதே ஒழிய வளர்ச்சிக் கேற்ற பருமனுடையதாக இல்லை. அலங்காரம் பண்ணிப்பார்த்தாலும் காம்பீர்யம் இல்லாது ஏதோ நெட்டை நெட்டையாகத்தான் தெரியும். இந்தக் கோயில் மிகவும் புராதனமான கோயில். பழைய காலத்தில் சிறிய கோயிலாயிருந்து, பின்னால் விரிவாக்கப் பட்டிருக்க வேண்டும். காரசசூரி நந்தி ராஜா என்பவரே விரிவாக்கியவர்களில் முதல்வர் என்று வரலாறு கூறுகிறது. பின்னால் திவான் பூர்ணையா என்பவர் மேலும் விரி வாக்கியிருக்கிறார், என்றாலும், மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் இன்றைக்கு இருக்கும் பெரிய கோயிலைக் கட்டியவர் என்று தெரிகிறது. இக்கோயில் பதின்மூன்று பதினான்காம் நூற்றாண்டிலேதான் விரிவடைந்திருக்க வேண்டும். இக்கோயிலில் 1529-ம் வருஷத்து கல்வெட்டு ஒன்றும் 1843-ம் வருஷத்து கல்வெட்டு ஒன்றும் இருக் கிறது. முந்தையது விஜயநகர மன்னன் கிருஷ்ணதேவராயக் காலத்தியது. பிந்தியது தளவாய் விக்ரமராஜா காலத்தியது. என்று வரலாற்று ஏடுகள் கூறுகின்றன. கோயிலுக்கு கொஞ்சம் வடபுறம் தள்ளி கபினி நதி' ஒடுகிறது. இங்கேதான் குண்டுலநதி கபினியுடன் கலக். கிறது. பின்னர் இந்தக் கபினி நரசயூர்பக்தம் காவிரியுடன் கலக்கிறது. கபினி நதிக்கரையில் பரசுராமருக்கு ஓர்