பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 தான் குறித்திருக்கிருர்கள். இல்லாவிட்டால் அறிவே வடிவ மான அன்னை பராசத்தி அறிவின்மையின் பின்டமான எருமை உருவில் அமைந்த அசுரனிடம் போரிட்டு வென் றாள், அதனைக் கொன்றே தீர்த்தாள் என்று புராணம் எழுதி வைப்பார்களா? மஹிஷமர்த்தனத்தின் தத்துவமே இதுதானோ? மனிதனுடைய அறிவின்மை, சோம்பல் எல் லாம் எருமை உருவில் எழுவதையும், அந்த அறிவின் மையை எல்லாம் அடக்கி ஆண்டு, வெற்றிகண்டு அறி வுடைமை ஓங்கி உயர்வதையும் கற்பனை பண்ணுவது தானோ மஹிஷமத்தனியின் கதை. இந்த மஹிஷமத் தனிதான் சாமுண்டி என்ற வடிவில் மைசூரில் கோவில் கொண்டிருக்கிறாள். ஆம் மஹிஷன் ஊர்தான் மைசூர் என்று குறுகியிருக்கிறது. அந்த மைசூருக்குகே செல்கிறோம் நாம் இன்று. ரயிலில் போனால் பங்களுர் சென்று அதனை பின்னும் சென்றால் மைசூரை அடையலாம். பங்களுரில் இருந்தும், கோவை, சேலம் முதலிய தமிழ் நாட்டு நகரங்களிலிருந்தும் காரிலும் பஸ்ஸிலும் சென்று மைசூரை அடையலாம். மைசூர் மஹிஷன் ஊர் என்றாலும் அது ஒரு செளந்தர்ய நகரம். எங்கு பார்த்தாலும் மாடமாளிகைகள், தோட் டங்கள். ஊரை அடுத்து ஒருமலை. அதுவே சாமுண்டி மலை. அந்தமலையின் மேல்தான்,மஹிஷாசுரனை வென்ற மஹிஷமர்த்தினி சாமுண்டிகோயில் கொண்டிருக்கிறார். நாம் நகரத்தை ம ட் டு ம் சுற்றிப்பார்க்க வந்தவர்கள் அல்லவே. கேத்ராடனம் அல்லவா புறப்பட்டிருக்கிறோம். ஆதலால் மலை மீது ஏறி அன்னை சாமுண்டியை முதலில் தரிசித்துவிட்டுத் திரும்புவோம். மலை பெரிய மலையல்ல. மலையின் உயரம் எல்லாம் 3500.அடி உயரமே. மலையை நோக்கி மைசூர் நகரத்திலிருந்து ஒரு பெருஞ்சாலை செல் கிறது. அந்த சாலை வழியே இரண்டு மைல் போய் படிக் கட்டுக்கள் ஏறி மலைசிகரத்தை அடையலாம். இந்தப்படிக் கட்டுகளை பதினேழாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தொட்ட தேவராயர் கட்டினார் என்று கூறுகிறார்கள்.