பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 இப்படிப் படி ஏறிப் போகும் வழியில் நல்ல கருங்கல் நந்தி ஒன்று படுத்திருக்கும். அதன் உயரம் 16-அடி. கால்களை மடக்கிப்படுத்திருக்கும் பாவனையில் நந்தி இருக்கிறது. அதன் கழுத்தில் அணிந்திருக்கும் மணிகள் எல்லாம் ஒலிப்பது போன்ற பிரமையை உண்டாக்கும். தஞ்சைப் பெரு உடையார் கோயில் நந்தி இதைவிடப் பெரியதுதான் என்றாலும், அழகிலே இந்த நந்தி சிறப்பானதாகவே இருக் கிறது. இந்த மலைப்படிகள் ஏற இயலாத பெருமக்கள் காரிலேயே மலை மீது செல்லாம். நான்கைந்து மைல் வளைந்துவளைந்துசெல்லும்பாதை. நந்தியைக் காணவிருப்ப முள்ளவர்கள் மேல்பக்கம் செல்லும் பாதைவழியாகச் செல்ல வேணும். கீழ்பக்கம் செல்லும் பாதைவழியாகச் சென்றால் நந்தியைப் பார்க்கமுடியாது. மலை மீது மைசூர் மகாராஜா வந்தால் தங்குவதற்கு என ஒரு சிறு அரண்மனை கட்டியிருக்கிறார்கள். அங்கு எல்லாம் செல்ல நமக்கு அனுமதி கிடைக்காது. ஆதலால் நேரே சாமுண்டேஸ்வரி கோயிலை நோக்கியே செல்ல லாம். மேற்கு நோக்கி செல்லும் பாதை கோவிலை நோக்கி தெற்கே திரும்பும் சந்திப்பில் நம்மை எதிர்கொண்டு வர வேற்க மஹிஷாசுரனே நிற்பார்; கத்தி ஒரு கையும், நாக பாசம் ஒரு கையுமாக ஓங்கி உயர்ந்த வடிவில் நிற்பான். சுதையால் செய்த வடிவில் அவன் பயங்கர தோற்றத்தில் தலையை யெல்லாம் பாப் செய்து கொண்டு நிற்கும் கோலம் உள்ளத்திற்கு அச்சம் தருவதாகவே இருக்கும். நாம்தான் அவனையும் கொன்று வெற்றி மாலை சூடிய சாமுண்டியின் சந்நிதிக்கே செல்கிறவர்கள் ஆயிற்றே. ஆதலால் மஹிஷனைக் கண்டு அஞ்சாமலேயே மேல் நடக் கலாம். காரிலே போயிருந்தால் காரைகோவிலின் வடபுறம் உள்ள மைதானத்தில் நிறுத்திவிட்டு கோயிலின் கீழவாயில் வந்து சேரலாம். வாயிலை ஒரு நல்ல கோபுரம் அழகு செய் கிறது. கோபுரத்தைப் பார்த்தால் நமது தமிழ்நாட்டுக் கோபுரம் போலவே இருக்கும். கோவில் வாயிலைக் கடந்து