பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 உண்டு என்றாலும், கடைசி நாளாகிய விஜயதசமி அன்று மகாராஜா பவனிவருகின்ற காட்சி கோலாகலமானதாக இருக்கும். ரத, கஜ, துரக பாததிகளுடன் பண்டைய மகா ராஜாக்கள் பவனி புறப்பட்டார்கள் என்பார்களே அது போல, யானை மீது அம்பாரியில் மகாராஜா வீற்றிருக்க, யானை, குதிரை, ஒட்டகம் எல்லாம் பவனியில் கலந்து கொள்ளும். அதன் பின் அரண்மனை முற்றத்தில் மகா ராஜா தர்பார் நடத்துவார். அரண்மனை உத்தியோகஸ் தர்கள் எல்லாம் கருப்புக்கலர் கோட்டும் தலைப்பாகையும் அணிந்து வந்து மகாராஜாவின் தர்பாரை அலங்கரிப்பார். இந்த தசாரப்பவனி போல வேறு எங்கும் பவனி நடப்ப தில்லை என்கின்றார்கள். இன்னும் ஒன்று, மைசூர் சென்று காவிரியில் கட்டி யுள்ள கண்ணம்பாடி அணையையும், பிருந்தாவனம் என்னும் பூந்தோட்டத்தையும் காணாமல் திரும்பினால், இந்த வாழ்நாளிலேயே பெறற்கரிய பேறு ஒன்றினை இழந்தவர்களாவோம். இந்த கண்ணம்பாடி அனையே கிருஷ்ணராஜசாகரம் என்று அழைக்கப்படும். இந்த அனை ஒன்றே முக்கால் மைல் நீளம். அகலம் 124-அடி உயரத் திற்கு தண்ணிர் கட்ட வசதியிருக்கிறது. ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலத்திற்கு இந்த அணையி லிருந்து தண்ணிர் கிடைக்கிறது. இந்த அணைக்கட்டில் கீழ்ப் பாகத்தில் தான் புகழ் பெற்ற பூங்கா-பிருந்தாவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பூங்கா முழுவதும் நீர் ஊற்றுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மின் காற்றைக் கொண்டு என்ன என்ன வர்ண வித்தைகள் செய்யலாமோ அத்தனையும் செய்யப்பட்டிருக்கிறது. இரவில் மின்விளக் கொளியில் அந்தப் பூங்கா தெய்வலோகம் போலவே இருக்கும். இந்த அணைக்கட்டில் ஒரு சிலை. காவிரித்தாய் கையில் கவசம் ஏந்தி நிற்பதுபோல அக்கலசத்திலிருந்து தண்ணீர் வழிந்தோடிக்கொண்டே இருக்கும்படி செய்திருக்