பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மைல் தொலைவில் இருக்கிறது. ரயிலில் போய் சீரங்கப் பட்டிணம் ஸ்டேஷனிலேயே ஜம்' என்று இறங்கலாம். இல்லை காரிலேயோ பஸ்ஸிலேயோ போய்ச் சேரலாம். ஊர்காவிரிகரையில் இருக்கிறது. பூரீரங்கத்தைப் போலவே காவிரியின் மத்தியில் அமைந்த தீவில்தான் அந்தப் பட்டணம் இருக்கிறது. ஊர் என்றதும் முதலில் நாம் காண்பது பழைய கோட்டையைத் தான். கோட்டையின் பிரதான வாயிலை யானை வாசல் என்கின்றனர். கோட்டை இடிந்துக் கிடப்பதால் அந்த யானை வாசல் வழியாகவும் போகலாம். இல்லை இக்கோட்டையின் மற்ற வழிகள் மூலமாகவும் போகலாம். இக்கோட்டை 1454-ல் திம்மண்ண நாயக்கர் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டிணத்திற்கும் ஐந்து மைல் தொலைவில் உள்ள கால்வாடி என்ற இடத்தில் இருந்த ஜைனக் கோயில்களை யெல்லாம் இடித்து அங்கு புதைத்திருந்த அளவற்ற செல் வத்தைக் கொண்டு கோட்டை கட்டப்பட்டது, என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன. .ே கா ட் ைட விஜயநகர மன்னர்கள் கையிலிருந்து மகம்மதியர்கள் கைக்கு மாறி யிருக்கிறது. இங்கு திப்புசுல்தான் கட்டிய மசூதி ஒன்று பிரமாதமாக இருக்கிறது. திப்பு கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் பல கட்டிடங்கள் கட்டியிருக்கிறார். வெளியே இருப்பவைதான் லால்பாக் என்ற தோட்டமும். தாரியா தெளலத் என்ற வசந்த மண்டபமும். இவைகளை ஊரிலிருந்து தி ரு ம் பு ம் பே ா து போய்ப்பார்த்துக் கொள்ளுவோம். நாம் முதலில் கோட்டைக்குள் சென்று அங்கு கோயில் கொண்டிருக்கும் சீரங்கநாதரை முதலில் தரிசித்து விட்டே மேல் நடக்கலாம். ஊரின் வடமேற்குக் கோடியில் சீரங்கநாதர் கோயில் இருக்கிறது. கோயில் வாசலில் ஒரு பெரிய கோபுரம் இருக்கிறது. இங்கும் கோயில் வாயிலை காலை 8 மணிக்குத்தான் திறக் கிறார்கள். பகல் ஒரு மணிக்கு, மூடி திரும்பவும் மாலை 5-30 மணிக்குத்தான் திறக்கிறார்கள். இந்தக் கோயில்