பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தான் மைசூரில் உள்ள கோயில்களில் எல்லாம் பெரியது என்கிறார்கள். கோயில் 894-ல் திருமலைய்யா என் பவரால் கட்டப்பட்டது என்று கூறுவர். ஆனால் கோட் டையைக் கட்டிய திம்மண்ண நாயக்கர் சீரங்கப்பட்டிணத் தி ேல ேய ராஜப்பிரதிநிதியாக இருந்திருக்கிறார். 101. சமணர் கோயில்களை இடித்து அதன்மூலம் கிடைத்த பொருள்களைக் கொண்டே கோட்டையையும் கோயி லையும் கட்டினார் என்பர். கோயில் வாயிலில் நுழைந்து உள்ளே சென்றால் விசாலமானதொரு வெளிப்பிரகாரம் இருக்கும். அதை அடுத்தே மகாமண்டபம். அந்த மகா மண்டபத்திலே, உத்சவகாலத்தில் உபயோகிப்பதற்காக அமைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்கமயமான கருட வாகனம் ஒன்று இருக்கும். அக்கருடனின் அனுமதி பெற்று மேல் நடந்தால் நவரங்கமண்டபம் வந்து சேருவோம். இந்த மண்டபத்து தூண்கள் எல்லாம் கடைந்து எடுத்தவை என்று என்னும்படி உருண்டு திரண்டிருக்கும். இங்குள்ள இரண்டு தூண்களை சதுர்விம்சதி துரண்கள் என்கின்றனர். அவைகளில் விஷ்ணுவின் இருபத்தி நாலு மூர்த்தங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. அந்த மண்டபத் திலிருந்து அர்த்த மண்டபம் சென்று அதன் பின்னரே கருவறையில் உள்ள சீரங்கநாதரைத் தரிசிக்கவேண்டும். இந்த ரங்கநாதர் தெற்கே தலைவைத்து வடக்கே காலை நீட்டி ஆதிசேக்ஷன் மேல் படுத்திருக்கிறார். நல்ல பெரிய வடிவம். இவரது உந்தியில் தாமரை பூத்திருக்கிறது. பக்கத் திலே பூரீ தேவி பூதேவியைக் காண இயலாது. காவேரித். தாய் கையில் தாமரை ஒன்றை ஏந்திய வண்ணம் சீரங்க நாதனின் காலடியில் உட்கார்ந்திருக்கிறாள். கெளதம முனிவருக்கும் கருவறையிலே இடம் கிடைத்திருக்கிறது. சீரங்கநாதர் காவிரித்திரு நதியிலே மூன்று இடத்தில் சயனித்திருப்பதாகவும், இந்த சீரங்கப் பட்டணம்தான். ஆதிரங்கம் என்றும் இடையிலே உள்ள சிவசமுத்திரம் மத்தியரங்கம் என்றும் திருச்சியை அடுத்த ரீரங்கமே. அந்தியரங்கம் என்றும் கணக்கிட்டிருக்கின்றனர். ...