பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டி. நரசப்பூர் வரை சென்று காவிரியைக் கடந்து அதன் வடகரை சென்றால் கோயிலுக்கு செல்லலாம். சோமநாத புரம் சென்று சேர்வதற்கு பஸ் வசதி உண்டு. சொந்தக் காரிலே சென்றால் வசதியாகச் சென்று சேரலாம். கோயிலை அணுகும்போது முன்னரே குறிப்பிட்ட கருட கம்பம்தான் முதலில் நம் கண்ணுக்குத் தோன்றும். அதனை வலம் வந்து கோயில் வாயிலை நோக்கி நடக் கலாம். கோயிலின் வெளிப்புறம் பார்வை அவ்வளவு பிரமாதமாக இராது. நடுவிலே ஒரு பெரிய மாடத்திலே கோயில் அமைத்து, அதை சுற்றியும் ஒரு வெளிப்பிரகார மும் அமைத்து. அந்தப் பிரகாரத்தைச் சுற்றி மண்டபங்கள் அமைக்கப்பட்டிருக்கும். நாம் முதலில் நுழைவது இந்த மண்டபத்தின் வாயில் வழியாகத்தான். இந்த மண்ட பத்தில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் பல இருக்கும். இந்த மண்டபத்திலிருந்து பார்த்தால் நம் கண் முன் அற்புதமான சிற்ப வேலைகள் நிறைந்த அழகிய கோயில் ஒன்று இருப்பதைக் காண்போம். வெளி முற்றத்தில் இறங்கி கோயிலுக்குள் நுழையுமுன் அந்த வெளி முற்றத்திலேயே நடந்து கோயிலை ஒரு சுற்று சுற்றலாம் என்றும் தோன்றும் கோயில் பெரிய கோயில் தான். அதன் நீளம் 215 அடி அகலம் 177 அடி என்றால் கோயிலின் அளவை கொஞ்சம் கற்பனைப் பண்ணிக் கொள்ளலாம் அல்லவா. கோயில் கிழக்கே பார்த்தக் கோயில், கோபுரத்தில் மூன்று மூர்த்திகள் பிரதிஷ்டை ஆகியிருப்பதால் மூன்று கோண அமைப்பில் பிரதான கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அதனாலேயே அக் கோயிலை திரிசுடாச்சரம் என்றும் அழைக்கின்றனர். கோயிலைச் சுற்றி ஒர் உயர்ந்த பீடம் அமைக்கப்பட்டிருக் கிறது. கோயில் சுவர்களில் எல்லாம் ஒடும் யானைகள், குதிரைகள் வரிசை வரிசையாக இருக்கின்றன. மேலும் இதிகாசங்கள், புராணங்களில் உள்ள கதைகளை விளக்கும் சிற்ப வடிவங்களும் அடுக்கடுக்காய் இருக்கும்.