பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பிரகலாதனது கதை முழுவதுமே சிற்பவடிவில் அமைந் திருப்பதைக் காணலாம். தென் பகுதியில் இராமாயணச் சிற்பங்களும், வடக்குப் பகுதியில் மகாபாரதச் சிற்பங் களும், மேற்குப் பகுதியில் பாகவதச் சிற்பங்களும் நிறைந் திருக்கின்றன. இவற்றைத் தவிர இன்னும் எண்ணற்ற தெய்வத்திருவுருவங்கள் எல்லாம் கோயில் சுவர் முழுவதும் உருவாகியிருக்கின்றன. சுவரிலே வெற்று இடம் காண்பது அரிது. விஷ்ணுவின் பல அவதாரங்களும் நரசிம்மன், வராகர் ஹயக்கிரீவர், வேணுகோபாலன், வாசுதேவர், இன்னும் பிரம்மன், சிவன், கணபதி, இந்திரன், மன்மதன், சூரியன், கருடன், லட்சுமி, சரஸ்வதி மஹஷமர்த்தனி முதலிய வடிவங்கள் எல்லாவற்றையுமே அங்கே காணலாம், இத்தனையும் பார்த்த நான் கோயிலுள் நுழைந்தால் அப்படியே அதிசயித்து நிற்கவேண்டியதுதான். ஒவ்வொரு துாணும் அத்தனை வேலைப்பாடு நிறைந்தவை. விதானங் களில் பலவகையான சிற்ப வின்யாசங்கள். பிரதான கோயிலில் நிற்பவன் கேசவன். அவனை அடுத்து வட பக்கத்து கோயிலில் தெற்கே பார்க்க நிற்பவன் ஜனார்த் தனன்.தென்பக்கத்து கோயிலில் வடக்கே பார்க்க நிற்பவன் கோபாலன். கேசவன், ஜனார்த்தனன், கோபாலன் எல்லாம் விஷ்ணுவின் வடிவங்களே. இவர்களில் குழல் ஊதும் கோபாலன் கிருஷ்ணாவதாரத்தில் நமக்கு அறிமுக மானவன். கேசவனும் ஜனார்த்தனனும் எந்த அவதாரத் தைச் சேர்ந்தவர்கள் என்று கேட்கத் தோன்றும். நமக்குத் தெரியும் மகாவிஷ்ணு ஆயிரம் பேர் பேர்த் தேவர் என்று. மகாபாரதத்தில் அனுசாசன பர்வத்தில் விஷ்ணுவின் சஹஸ்ரநாமங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.அவைகளில் இருபத்திநான்கு அதிமுக்கியமானவை. அந்த இருபத்தி நான்கில் இரண்டு பெயர்கள்தான் கேசவன், ஜனார்த்தனன் என்பவை. இந்த மூர்த்தியின் வடிவங்களை நாம் ஹொய் சலர் காலத்திய கோயில்களில்தான் காண்கின்றோம். இந்த இருபத்திநான்கும் கிட்டத்தட்ட ஒன்று போலவே 2738–4