பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 வரதநந்தினி. அவள் ஏதோ மகம்மதிய மதத்தினைச் சேர்ந்தவள். ஆனாலும் அவளுக்குக் கிடைத்திருக்கும் பேறு பெறற்கரிய ஒன்றுதான். இந்த திரு நாராயணனையே நம்மாழ்வார் மங்களாசாஸ்னம் செய்திருக்கிறார். திருவாய் மொழியில் நான்காம்பத்தில் ஒரு நாயகமாய் என்று தொடங்கும் பாசுரம் திரு நாராயணனைப் பற்றியது தான். நம்மாழ்வாரும் வரதநந்தினிக்கு இடங்கொடுத்து இருக்கும் நாரணன் தாள்களை சிந்தித்து உய்வதிலே மனதைச் செலுத்தியிருக்கிறார். ஒரு நாயகமாய் ஓட, உலகுடன் ஆண்டவர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையா பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர் திரு நாரணன் தாள்காலம் பெறச் சிந்தித்து உய்மீனோ ! என்பதுதானே நம்மாழ்வரது பாசுரம் ! இந்தப் பாசுரத்தை ஓதி திருநாரணன் தாளை வணங்கித் திரும்பும்போது ரங்க மண்டபத்தின் தென்பகுதியிலே தனி ஆஸ்தானத்திலே உற்சவ மூர்த்தியான செல்வப்பிள்ளை பூரீதேவி பூதேவி சகிதம் ஒரு அழகிய மஞ்சத்திலே நிற்பார். இவர்தான் அன்று டில்லி வரை சென்று சுல்தான் மகம்மது அன்பிற்கும் காதலுக்கும் பாத்திரமாகி பின்னர் மேல் கோட்டைக்கு, ராமானுஜரால் கொண்டு வரப்பட்டவர். இவரை இன்று செல்வப்பிள்ளை ராயர் என்று அழைக்கிருர்கள். ஆம் வரதநந்தினி என்னும் சுல்தான் மகளால் செல்வமாக பராமரிக்கப்பட்டவர் அல்லவா? அவர் இன்று பக்தர் களுக்கு எல்லாம் செல்வப்பிள்ளையாக இருப்பது பொருத்தம்தானே. இவரை ராமப்பிரியர் என்றும் அழைக் கிறார்கள். இராமானுஜரால் சிறைமீட்கப் பெற்றவர் ஆயிற்றே, ஆதலால் ராமப் பிரியராயிருக்கிருர் போலும்