பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/181

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்
179
 

திருஉரு. அடியில் கொடுத்த பாதுகையைப் பார்த்தால், எங்கோ அவசரமாகச் செல்லும் வேகம் தெரியும். கையிலே பிக்ஷைப் பாத்திரம் ஏந்திய நிலை. அந்த நிலையிலும் மானுக்குப் புல்லளிக்க மறக்கவில்லை இறைவன். ஆம். கல்லினுள் சிறு தேரைக்கும், கருப்பை அண்டத்து உயிர்க்கும் உணவு அளித்துக் காக்கும் கருணையுடையவன் அல்லவா அவன்.

மற்றொரு பக்கத்திலே பூதகணம் ஒன்றும் தலையில் ஏந்திய பாத்திரத்துடன் நிற்கிறது. அரையைச் சுற்றிப் பன்னகம், தலையைச் சுற்றி அழகான கிரீடம், ஆடை. அணிகள் எல்லாம் இல்லாமல் நிர்வாண கோலத்தில் நிற்கிறார் அவர். பிக்ஷாடனரின் தத்துவத்தைத்தான் இவர் உரு

வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf
வழுவூர் பிக்ஷாடனர்

எடுப்பதற்குரிய புராண வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாமே. தாருக வனத்திலே உள்ள முனிவர்கள் சகல கலைகளிலும் வல்லவர்கள் . அதனால் தருக்கித் திரிந்தவர்கள் . இவர்கள் ஆணவத்தை அடக்கவே புறப்பட்டிருக்கிறார் சிவ பெருமான். உடன் வந்திருக்கிறார் மகாவிஷ்ணு . இருவருமே தங்கள் உருவத்தை