பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

வேங்கடம் முதல் குமரி வரை

விளக்கங்கள் எல்லாம் விபரீதமாய்ப் படுகின்றன. குருவையே திருத்த முனைகிறார் அந்த இள வயதிலேயே இவர், சிஷ்யர்களால் இவர் இளைய பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

தம்மை மிஞ்சிவிடுவான் பையன் என்று கண்ட குரு யாதவப்பிரகாசர், காசி யாத்திரை செய்வதென்றும், அங்கு கங்கையில் பயலை மூழ்கடித்து விடுவது என்றும் திட்டமிட்டுப் பயணம் துவக்குகிறார். ஆனால் இவர் தமிழ் நாட்டுக்குச் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றனவே. பரந்தாமன் சும்மாயிருப்பானா?

விந்திய மலைச் சாரலிலேயே இளைய பெருமாளைச் சந்திக்கிறான். தானும் தன் மனைவியும் வேடன் வேட்டுவச்சி உருவில் வந்து, யாதவப் பிரகாசர் சிஷ்ய குழாத்திலிருந்து இளைய பெருமாளைக் கூட்டி வந்து, காஞ்சிக்குப் பக்கத்தில் உள்ள சோலையில் விட்டு விட்டு மறைந்து விடுகிறான்.

காஞ்சிக்கு வந்த அந்த இளைய பெருமாளுக்கு அங்குள்ள பேரருளாளனுக்குச் சேவை செய்ய ஆவல் உண்டாகிறது. அப்படியே காஞ்சிக்கு இரண்டு மைல் தொலைவில் உள்ள சாலைக் கிணற்றிலிருந்து தினம் தண்ணீர் இறைத்துத் திருமஞ்சன கைங்கர்யத்தைச் செய்து வருகிறார். இந்தச் சமயத்தில்தான் ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீ ஆளவந்தார், கச்சிவரதனது தரிசனத்துக்கு வந்தவர், இந்த இளைஞனைப் பார்க்கிறார். அவனது தேஜஸைக் கண்டு, தாம் நீண்ட நாட்களாகத் தேடி வந்தது இவனல்லவா என்று தெரிந்து, இவனைத் தன்னிடம் சேர்க்க அந்த அத்திகிரி வரதனிடமே வேண்டிக் கொள்கிறார்.

பெரிய நம்பியிடம் சொல்லி, இளைஞனை ஸ்ரீரங்கம் கூட்டி வரச் சொல்கிறார். ஆனால் இளைஞன் ஸ்ரீரங்கம் போய்ச் சேருமுன்பே, ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளி