பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

வேங்கடம் முதல் குமரி வரை

வீற்றிருக்கும் ஸ்திர பேதங்கள் நேருக்கு நேராக ஒன்றின் மேல் ஒன்றாக அமைக்கப் படவில்லை, இப்படி விமான அமைப்பும் மூர்த்திகளின் அமைப்பும் கொண்ட கோயில் தமிழ் நாட்டில் அதிகம் இல்லை.

இந்த இடத்தில் உள்ள சுந்தரராஜ வரதனைப் பிரும்மா ருத்ரன் பூதேவி மார்க்கண்டேயர் முதலியோர் வழிபட்டு முத்தியடைந்தார்கள் என்பது தல புராண வரலாறு. மார்க்கண்டனுக்கு அருள் புரிந்தவர் சிவபெருமான் என்பதுதானே புராணப் பிரசித்தம். அப்படி இருந்தும் இந்த வரதனிடம் அவர் ஏன் வந்து சேர்ந்தார் என்று சந்தேகிப் போம் நாம். தம் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க நம்மாழ்வாரே வருவார்.

புக்கடிமையினால் தன்னைக் கண்ட
மார்க்கண்டேயன் அவளை
நக்கபிரானும் அன்று உய்யக்கொண்டது.
நாராயணன் அருளே
கொக்கலர் நடந்தாழை வேலி
திருக்குருகூர் அதனுள்
மிக்க ஆதிப்பிரான் நிற்க
மற்றைத் தெய்வம் விளம்புதிரே!

என்பதுதானே நம்மாழ்வார் விளக்கம்.

இந்த உத்தரமேரூர் முழுவதையும் இப்படியே வரதர்களும் வைகுண்ட வாஸர்களுமே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றில்லை. ஊருக்கு மேல் கோடியில் கொஞ்ச இடத்தைக் கைலாசநாதருக்கும் அவருடைய குமாரர் சுப்பிரமணியருக்கும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

சுப்பிரமணியர் கோயில் சமீபத்தில் எழுந்த கோயில். கைலாசநாதர் கோயிலையும் விமானத்தையும் பார்த்தாலே அது பல்லவர் காலத்திய கோயில் என்று தெரியும். அங்குள்ள