பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

போகமும் ஒன்றிய நிலையில் மூர்த்திகளைக் கண்டு வணங்க வசதியாக இத் திருப்பதி அமைந்திருப்பது விசேஷம்தானே.

இந்தப் பக்தவத்ஸலர் கோயில் நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப் பட்டிருக்க வேண்டும். விஸ்தாரமான வெளிப் பிராகாரங்கள், மண்டபங்கள் எல்லாம் நிறைந்திருக்கின்றன, இங்கே.

இந்தச் சோழசிங்கபுரம் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் ஒரு போர்க் களமாகவும் இருந்திருக்கிறது. 1881 ஆம் ஆண்டில் கூட் (Coote) என்ற படைத்தலைவன் தலைமையில் ஆங்கிலப் படையும் மைசூர் ஹைதர் அலியின் படையும் கை கலந்திருக்கின்றன.

இங்கு நடந்த போரில் மாண்ட மகமதிய சேனை வீரர்கள் இருவரது சமாதி இன்னும் இருக்கிறது, இங்கே, இவர்களைப் பற்றிய நினைவுச் சின்னமெல்லாம் இங்குள்ள சப்ரிஜிஸ்திரார் ஆபிசிலே நின்று கொண்டிருக்கிறது. சரியான இடம்தான். போரில் காட்டிய வீரத்தையெல்லாம் பதிந்து வைக்க, ஆவணக் களரியைவிடச் சிறந்த இடம் வேறு ஏது?