பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

59

இருக்கும் போது உனக்கு நாங்கள் வேறு 'பழம்' தர வேண்டுமா?' என்று கூறி, அவனைச் சமாதானம் செய்து வைக்கிறாள்.

மூப்பழம் நுகரும் மூஷிக வாகனர் மாம்பழம் பெற்ற கதை இதுதான். இது எந்த ஸ்தலத்தில் நடந்தது என்பதற்கு ஆதார பூர்வமான அத்தாட்சி ஒன்றும் கிடைக்கவில்லை. அரிய உண்மை ஒன்றை விளக்க எழுந்த அற்புதமான கற்பனைதானே இக்கதை. என்றாலும் இது நடந்தது. திருவலம் என்ற தலத்தில்தான் என்று அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். கதையையும் அதற்குரிய படங்களையும் எழுதி, அங்குள்ள வல்லநாத ஈசுவரர் கோயிலில் தொங்கவிட்டும் வைத்திருக்கிறார்கள்.

திருவலம் என்ற இந்தச் சிறிய ஊர் வட ஆர்க்காடு மாவட்டத்தில் சென்னை - பங்களூர் ரோட்டில் சென்னையிலிருந்து எழுபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கிறது. பொன்னை என்று இன்று வழங்கும் நீவா நதிக்கரையில் இருக்கும் தலம் இது.

சென்னையிலிருந்து செல்வோர் இந்த ஊர் சேர்வதற்கு முன் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்றைக் கடக்க வலம் வரும் விநாயகர் வேண்டும். பாலம், மற்றப்