பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

61

பெயர் இல்லை. வரசித்தி விநாயகர் என்றே பெயர் இட்டிருக்கிறார்கள்.

வலம் வந்து மாங்கனி பெற்று வரசித்தி பெற்றவர் அவர். பிரார்த்தனை செய்து கொள்ளும் பக்தர்களும் வரசித்தி பெறுவதற்கு அருளுவார். இவரை இலக்கியத்தில் காண வேண்டுமானால், பதினோராம் திருமுறையையே ஒரு திருப்புத் திருப்ப வேணும். நம்பியாண்டார் நம்பி பாடியுள்ள நாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலைப் பாடல்களைப் படிக்க வேணும்.

கொம்பளைய வள்ளி
கொழுநன் குறுகாமே
வம்பனைய மாங்கனியை
நாரையூர் நம்பனையே
தன்னவலம் செய்து கொளும்
தாழ்தடக்கையாய், என் நோய்
பின் அவலம் செய்வது
எனோ பேக?

என்ற பாடலைப் படித்தால் வலம் வந்த விநாயகர் பெருமை தெரியும். கலை உலகில் இவரைக் காண, வட ஆர்க்காட்டு மாவட்டத்தின் தலை நகரான வேலூருக்கே போக வேண்டும். அங்குள்ள கோட்டையின் உள்ளே மூர்த்தி இல்லாக் கீர்த்தியோடு விளங்கும் ஜலகண்டேசுவரர் கோயிலுக் குள்ளேயே நுழைய வேண்டும். கலை உலகில் பிரசித்தி பெற்ற கல்யாண மண்டபத்துத் தூண் ஒன்றின் அடித்தளத்திலே அவரைக் காணலாம்.

போட்டிப் பந்தயத்தில் மாங்கனியைப் பெற்றபின், அந்த உற்சாகத்தில் அவர் மூஷிக வாகனத்தில் ஏறிச் சவாரி செய்வதே ஒரு ஜோர். இந்த நிலையிலே உற்சாகமாக அவர் வாகனத்தில்