பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வேங்கடம் முதல் குமரி வரை

அசையவில்லை. தாடகை என்ற பெண் மகளின் அன்புக்காகத் தலை சாய்த்த தலைவன், மற்றொரு ஆண்மகனின் அன்புக்காகக் காத்திருக்கிறான்.

அப்போது திருக்கடவூரிலே, கலையர் என்ற ஓர் அன்பர் குங்கிலிய தூபம் போட்டுவந்த காரணமாகக் குங்கிலியக் கலையர் என்ற பெயரோடு வாழ்கிறார். அவர் ஒரு நாள் திருப்பனந்தாளுக்கு வருகிறார். தலை சாய்த்து நிற்கும் இறைவனைக் காணுகிறார். பின்னர் கயிறு ஒன்றைத் தன் கழுத்தில் கட்டி, அதை இறைவனது லிங்கத் திருவுருவில் மாட்டி இழுக்கிறார்.

யானைக்கும் சேனைக்கும் அசைந்து கொடாத இறைவன், கலயரது அன்புக்குக் கட்டுப்பட்டு நிமிர்ந்து விடுகிறான். மாலை சாத்தும் தாடகையின் மானங்காப்பான் தாழ்ந்த சடையப்பன், கயிறு இட்டு இழுக்கும் கலையன் அன்பில் நிமிர்ந்திருக்கிறான், என்றேன்.

அவர் லேசாகச் சிரித்துவிட்டு, ‘என்ன சார்! கதை அளக்கிறீர்கள். பிரதிஷ்டை செய்த போதிருந்த திருக்கோலத்தோடு ஆடாது அசையாது இருக்கும் இந்த லிங்கத் திருவுரு சாய்ந்ததற்கு ஒரு கதை, நிமிர்ந்ததற்கு ஒரு கதை. எல்லாம் உங்கள் கற்பனையோ?” என்றார்.

'கற்பனையாகவே இருந்தாலும், இது என்னுடைய கற்பனை அல்ல. நம் முன்னோர்கள் கற்பித்த கற்பனையே. கற்பனையே ஆனாலும், மக்கள் அன்புக்கு இறைவன் எவ்வளவு கட்டுப்பட்டவன் என்பதை விளக்க எழுந்த கதை என்று விரித்துரைக்கவாவது நாம் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?’ என்றேன்.

பின்னும் சொன்னேன்: 'உம்மைப் போன்றவர்கள், குனிந்ததையும் நிமிர்ந்ததையும் திருப்பனந்தாள் மூர்த்தியைக் கண்டு நம்ப மாட்டார்கள் என்று தெரிந்தே, இன்னொரு