பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

75

தலத்தில் குனிந்தவர் தலையை நிமிர்த்தாமலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறாரே!' என்று விளக்கினேன்.

அப்படித் தலை சாய்ந்த தலைவராம் மார்க்கசகாயர் இருக்கும் தலம்தான் விரிஞ்சிபுரம். வட ஆர்க்காடு மாவட்டத்திலே வேலூருக்கு மேற்கு எட்டு மைல் தொலைவில் உள்ள ஊர். அந்த ஸ்தலத்துக்கே இன்று செல்கிறோம் நாம்.

இங்கு இறைவன் முடி சாய்ந்ததற்கு ஒரு அழகான கதை. பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் ஒரு போட்டி. தங்களில் யார் பெரியவர் என்று. இவர்கள் தம் சிறுமையை உணர்த்த விரும்பிய சிவபெருமான் 'பொங்கழல் உருவனாக' அண்ணாமலையில் நிற்கிறான். இந்த அண்ணாமலையான் திருவுருவின் அடியையோ முடியையோ யார் முதலில் கண்டறிந்து வந்து சொல்கிறார்களோ, அவர்களே பெரியவர் என்று தீர்மானிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொள்கிறார்கள்.

வராக உருவில் அதலபாதாளங்களையெல்லாம் குடைந்து சென்று, இறைவனது அடியைக் காணாமலேயே திரும்பி விடுகிறார், விஷ்ணு. அன்ன உருவில் வானுலகில் பறந்து முடி காணச் சென்ற பிரமனுக்கும் அதே நிலைதான் என்றாலும், பிரமன் தன் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், தான்