பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

7

கிறான், ஒவ்வொரு வருஷம் சித்திரை மாதம் 10, 11, 12 தேதிகளில் காலை ஆறு மணிக்கெல்லாம் கோயில் வாயில், கொடி மரம், நந்தி, பலிபீடம் எல்லாவற்றையும் கடந்து சூரியன் கருவறைக்குள் புகுந்துவிடுகிறான். அந்த அறையை ஒளிமயமாக் ஆக்குவதோடு தன் ஒளியாகிய கரங்களாலே லிங்கத் திருவுருவத்தைத் தழுவி வழிபடுகிறான். இந்த வழிபாடு ஓர் அற்புதக் காட்சி. இக்காட்சி அமையும் வகையில், கட்டிடம் கட்டிய சிற்பிகளுக்கு நமது தலை தானாகவே வணங்கும். இன்னும் வெளி முற்றத்தைக் கடந்து நடந்தால் கல் தேர் போல் அமைந்த ஒரு பெரிய மண்டபத்தைப் பார்ப்போம். அதுதான் நடராஜர் சந்நிதி, அந்தக் கல்தேர் சக்கரங்கள், அதனை இழுக்கும் குதிரைகள் எல்லாம் அழகானவை. உள்ளே சென்றாலோ, 'அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த' அதற்கேற்ப நடனமிடும் நடராஜர் திருக் கோலத்தைக் காணலாம். கோயிலுள் சென்று நாகேசுவரனை வணங்கி வலம் வந்தால் எண்ணரிய கலைச்செல்வங்களை மாடக் குழிகளில் காணலாம். கல்லிலே வடித்த கட்டழகியும் அவள் பக்கத்திலேயே முற்றும் துறந்த பௌத்த பிக்ஷவும் நிற்பார்கள் தென் பக்கத்திலே.

மேற்கு நோக்கியமாடத்திலே அழகான அர்த்தநாரீசுரர் வடிவம், இக்கோயில் ராஜராஜன் காலத்துக்கும் முந்தியது என்று பாறைசாற்றிக் கொண்டு நிற்கும். கலை உலகிலே ஓர் அற்புத சிருஷ்டி அது. இடப்பாகத்தில் இருக்கும் பெண்ணின் இடையைப் பெரிதாக்கி அதற்கேற்றவாறு ஒரு நெளிவு கொடுத்துச் சிற்பி அச்சிலா உருவத்தைச் சமைத்திருப்பது பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தக்கது. வட பக்கத்துக் கோஷ்டங்களிலோ பிரம்மா, துர்க்கை எல்லாம்; இதோடு ஒரு பொந்துக்குள்ளே அழகிய பிக்ஷாடனர் ஒருவர். இந்த நாலைந்து சிலைகளை மட்டும் பார்த்துவிட்டால் போதும், சோழர் கலை வளத்தை உலகுக்கு அறிவிக்க. இந்தச் சிலைகளைச் செய்தமைத்த கலைஞர்களுக்கும் வணக்கம்