பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வேங்கடம் முதல் குமரி வரை

ஒரு கோபுரம் அமைத்து அதனையே பிரதான வாயிலாக அமைத்திருக்கிறார்கள். நிர்வாகிகள். மேலும் இந்த வாயிலையும் அதற்கடுத்த கல்யாண மண்டபத்தையும் கடந்து சென்றால், அன்னை மீனாட்சி நம்மை எதிர்நோக்கி வரவேற்பாள். பெரும்பெயர் முருகனாம். அவளது பிள்ளையைத் தரிசிக்க வருபவர்கள் ஆயிற்றே. அதனால்தான் பரிவோடேயே தன் பிள்ளையிருக்கும் மேல் தளத்துக்கும் வழிகாட்டுவாள்.

இத்தக் கோயில் உண்மையில் ஒரு மலை அல்ல, கல்லினால் கட்டப்பட்ட ஒரு கட்டு மலை. கோயில் மூன்று பிராகாரங்களுடன் விளங்குகிறது. மலையின் அடித் தளத்திலே சோமசுந்தரனும், மீனாட்சியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சோமசுந்தரனை மதுரையரசன் வரகுண பாண்டியன் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அவன் பிரமஹத்தி தோஷம் நீங்கத் திருவிடைமருதூர் செல்லும் வழியில் ஒருநாள் அதிகாலையில் இங்கு வந்திருக்கிறான், தினசரி தன் குலதெய்வமான சோமசுந்தரனையும் மீனாட்சியையும் வழிபடுபவன் ஆயிற்றே. ஆதால் இருவரையும் இங்கு பிரதிஷ்டை பண்ணி வணங்கிவிட்டே மேல் நடந்திருக்கிறான். சோம சுந்தரர் கீழ்த்தளத்திலேயே இருந்து கொள்கிறார். மகன் குருநாதன் ஆயிற்றே. ஆதலால் அவனுக்குச் சமானமாய் மேல் தளத்திலேயே எப்படி இருப்பது என்று நினைத்துவிட்டார் போலும்!

நாம் இந்தச் சோமசுந்தரரை வணங்கிவிட்டு மலை ஏறலாம் என்றால் அர்ச்சகர்கள் சம்மதிக்க மாட்டார்கள். 'முதலிலே வணங்க வேண்டுவது சாமிநாதனையே. அவனை வணங்கிவிட்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆதலால் கோயிலின் கீழ்ப்புறம் உள்ள படிக்கட்டுகளில் ஏறலாம். மொத்தம் 60 படிகள் அங்கு