பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

85

திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், இந்தத் திருப்பதியையும் பாடியிருக்கிறார்.

கருத்தினால் வாக்கினால்
நான் மறையும் காணா
ஒருத்தனை நீ! நெஞ்சே!
உணரில் பெருத்த முகில்
வண்ணமங்கை கண் கால்
வனசத் திருவரங்கம்
கண்ண மங்கை ஊர் என்று காண்.

என்பது அவரது பாட்டு. கண்ணமங்கை செல்பவர்களுக்குக் கலையழகைக் காணும் வாய்ப்பு உண்டு. பக்த வத்ஸலனையும் அபிஷேகவல்லியையும் வணங்கும் பேறு உண்டு. இந்தத் தலத்திலே சிறப்பான திருவிழா வைகுண்ட ஏகாதசிதான். ஆம்! வைகுண்டநாதன் கம்பீரமாகக் கொலுவிருக்கும் தலம் அல்லவா! ஆதலால் வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்றே செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நான் நின்று கொள்கிறேன்.

வே.மு.கு.4 - 7