பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

21

முருகன். அந்தப் பழநி ஆண்டவன் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

பழநி, திண்டுக்கல்-பொள்ளாச்சி லயனில் திண்டுக்கல்லுக்கு வட மேற்கே 36 மைல் தொலைவில் இருக்கிறது. ரயிலிலே செல்லலாம். கார் வசதியுடையவர்கள் காரிலும் செல்லலாம். மதுரையிலிருந்து, திண்டுக்கல்லிலிருந்து, கோவையிலிருந்து எல்லாம் பஸ் வேறே செல்கிறது. பழநியில் தங்குவதற்கும் நல்ல வசதிகள் நிறைய உண்டு, தேவஸ்தானத்தார் கட்டியிருக்கும் சத்திரம் விசாலமானது, வசதி அதிகம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மூன்று பர்லாங்கு தூரத்தில் சத்திரம். அங்கிருந்து ஐந்து பர்லாங்கு தூரத்தில் அடிவாரம். அதுவரை வண்டியில் செல்லலாம். முன்னமேயே சொல்லியிருக்கிறேன், பழநி ஆண்டவன் மலை மேல் ஏறி நிற்கிறான் என்று. ஆதலால் மலை ஏறியே அவன் கோயில் செல்ல வேண்டும்.

மலை ஏறுமுன் மலையையே வலம் வருதல் வேண்டும் கிரிச்சுற்று என்பர் இதனை. இது அண்ணாமலையில் சுற்றியது போல் அவ்வளவு அதிக தூரம் இல்லை. ஒரு மைலுக்குக் குறைவாகவே இருக்கும். பழனிமலை சுமார் 450 அடி உயரமே உள்ளது. அதன் மீது ஏற 660 படிகள் நல்ல வசதியாக விசாலமான மண்டபங்களுடன் கட்டப் பட்டிருக்கின்றன. ஏறுவது சிரமமாக இராது. என்றாலும் வயோதிகர்களும், பெண்களும் சிரமமில்லாது ஏற யானைப் பாதை என்று ஒன்று இருக்கிறது. கொஞ்சம் அதிக தூரம் வளைந்து செல்லும். அதன் வழி ஏறினால் கொஞ்சமும் சிரமம் தோன்றாது. இப்பொழுது மலைக்கு செல்வதற்கு இழு மோட்டார் வண்டிப் பாதை அமைத்திருக்கிறார்கள். காசைக் கொடுத்து ஏறி அமர்ந்தால் சிரமமில்லாது மலை சேர்ந்து விடலாம். என்றாலும் படிக்கட்டுகளின் வழியாக ஏறுவதே முறை. வழியில் உள்ள இடும்பன் கோயில், குராவடிவேலவர் சந்நிதி எல்லாம் கண்டு தொழுது மேற்செல்லுதல் கூடும். அடிவாரத்தில் ஒரு பிள்ளையார். அவரை வணங்கியே மலை ஏறுவோம். முதலிலேயே ஒரு விசாலமான மண்டபம். கோலை பி.எஸ்.ஜி. கங்கா நாயுடு கட்டியது. அந்த மண்டபத்தில் இரண்டு மூன்று நல்ல சிலா வடிவங்கள்.

கண்ணிடந்து அப்பும் கண்ணப்பரும் காளத்திநாதரும் ஒரு தூணிலே, மாமயிலேறி விளையாடும் முருகன் ஒரு தூணில். இன்னும்