பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

வேங்கடம் முதல் குமரி வரை

திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் போதும் தினமும் மதுரை வந்து சோமசுந்தரரைத் தரிசித்து விட்டுக் கானப்பேரூருக்குத் திரும்பி வருகிறான். ஒருநாள் அடை மழை பெய்தது. கானப்பேரூரிலிருந்து மதுரை வந்து திரும்ப முடியவில்லை. அதனால் உணவே அருந்தாமல் அமர்ந்திருக்கிறான். அந்தச் சமயத்தில் சோமசுந்தரனே அந்தப் பாண்டிய மன்னன் வீரசேனன் கனவில் தோன்றி, 'இனி நீ இங்கு வரவேண்டியதில்லை. நாமே அங்கு வந்து, காளிசுவரனுக்கும் சுவர்ணவல்லிக்கும் இடையிலே வீற்றிருப்போம்' என்று சொல்லி மறைகிறான். விடிந்து எழுந்து பார்த்தால் குறிப்பிட்ட இடத்தில் ரிஷபத்தின் அடிச்சுவடுகள் தோன்றுகின்றன. அந்த இடத்திலே அவசரம் அவசரமாக மீனாக்ஷி சுந்தரேசருக்குக் கோயில் எழுகிறது. அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் அரன் இங்கு சுந்தரனாக எழுந்தருளுகிறார்.

காளீசர், சோமேசர், சுந்தரேசர் மூவரும் கோயில் கொண்டிருக்கும் இந்தக் கோயிலுக்கு மேல்புறத்திலே ஒரு பெரிய தெப்பக்குளம். இக்குளம் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் போல் அவ்வளவு பெரியது. அன்று என்றாலும் அமைப்பு எல்லாம் அதே போலத்தான். களத்தின் நடுவில் இருக்கும் நீராழி மண்டபமே ஒரு பெரிய கோபுரமுடைய சிறிய கோயிலாகவும், அதைச் சுற்றி நான்கு மூலைகளிலும் கோபுரங்களோடு அமைந்த மண்டபங்களாகவும் இருக்கின்றது. இந்தக் குளத்தைத்தான் ஆனைமடு என்கிறார்கள். ஆம்! ஆனை இறங்கினாலும் அதை முழுகடிக்கும் ஆழமுடையது என்று தெரிகிறது. என்றாலும் இந்தக் குளம் எப்படி ஏற்பட்டது. அதற்கு ஆனைமடு என்று ஏன் பேர் வந்தது? என்பதற்கு ஒரு ரஸமான கதை.

தேவேந்திரனது ஐராவதம் என்னும் வெள்ளை யானை கைலாசம் போய்த்திரும்ப வருகிறது. விளையாட்டாக, அங்கிருந்த ரிஷபத்தின் வாலைப் பிடித்து இழுத்திருக்கிறது. ரிஷபமான நந்திக்கோ ஒரே கோபம், உடனே, 'நீ காட்டானைடாகப் பூமியில் பிறந்து ஆயிரம் வருடங்கள் வருந்தக் கடவாய்' என்று சாபமிட்டுவிடுகிறது. நந்தியிட்ட சாபத்துக்கு விமோசனத்தை நாயகனே