பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 4.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

93

திரும்பப் பெறும் விடை; கோசம் என்றால் வேதம் என்று கொருள்). அந்த உத்தரகோச மங்கைக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்த உத்தரகோச மங்கை ராமநாதபுரம் மாவட்டத்திலே, ராமநாதபுரத்துக்கு நேர் மேற்கே ஐந்தாறு மைல் தூரத்தில் இருக்கிறது. வாகன வசதி உள்ளவர்கள் எல்லாம் ராமநாதபுரத்திலிருந்த மதுரை செல்லும் ரோட்டில் ஐந்து மைல் சென்று பின்னர் தெற்கே திரும்பி மண் ரஸ்தாவில் மூன்று மைல் போக வேண்டும். உத்தரகோச மங்கை (Uthrakosa mangai Train halt) என்னும் ஸ்டேஷனில் இறங்கி மூன்று மைல் நடந்து சென்றாலும் இந்த ஊர் போய்ச் சேரலாம். ஊர் சின்னஞ்சிறிய ஊர். ஊருக்கு மூன்று மைல் தொலைவிலேயே கோயில் கோபுரம் வானளாவ உயர்ந்து நிற்பது தெரியும். வடக்கு வீதி வழியாகச் சென்று கோயில் முன்பு வந்த நின்றோமானால் அங்கு பெரிய கோபுரத்துக்குத் தென் பக்கத்தில் ஒரு கோபுரம் இடிந்து கிடப்பது தெரியும். ஜெய்ப்பூர் ஹவாய் மஹல் போல் இந்த இடிந்த கோபுரம் காட்சி தரும். இடிந்து கிடப்பதே இத்தனை பெரிது என்றால்-இடியாத நிலையில் அது எத்தனை பெரிதாயிருந்திருக்கும் என்று கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டியதுதான்.

இந்த ஊரின் பெருமை எல்லாம் இங்கே மாங்கள் நாயகரும் பூண்முலை அம்மையும் கோயில் கொண்டிருக்கிறார்கள் என்பதனால் மட்டும் அல்ல. இந்தத் தலத்திலே மாணிக்கவாசகர் வந்து தங்கியிருந்து, உத்திரகோச மங்கைக்கு அரசே என்று கூலி அழைத்து நீத்தல் விண்ணப்பத்தைப் பாடிய காரணத்தால் சமய உலகிலும், இலக்கிய உலகிலும், இவ்வூர் பிரபலம் அடைந்திருக்கிறது. அரிமர்த்தன பாண்டிய மன்னன் குதிரை வாங்க அளித்த பொருளையெல்லாம் எடுத்துச் சென்று திருப்பெருந் துறையில் ஆலயப் பணிக்குச் செலவு செய்கிறார் வாதவூரர், பின்னர் இந்த வாதவூரரைக் காப்பதற்காகவே, திருப்பெருந்துறை சிவபெருமான் நரிகளையெல்லாம் பரிகளாக்கிக் கொண்டு வருகிறார் மதுரைக்கு.