பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

137

தாண்டவம், சந்தியா தாண்டவம், சிருங்கார தாண்டவம், திரிபுர தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், முனி தாண்டவம், சம்ஹார தாண்டவம், உக்கிர தாண்டவம், பூத தாண்டவம், பிரளய தாண்டவம், புஜங்க தாண்டவம், அத்த தாண்டவம் என்பன என்றும் கூறுவர். இன்னும் திருச்செங்காட்டங் குடியிலே உள்ள உருத்திராபதீஸ்வரர் கோயிலிலே வடக்குப் பிராகாரத்திலே உள்ள ஒரு சிறு மண்டபத்திலே 'நவதாண்டவம்' என்று எழுதி பத்து வடிவங்களை வைத்திருக்கின்றனர்.

அதிலும் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவைகளில் பல தாண்டவ வடிவங்களே அல்ல!

இன்னும் தாண்டவ வடிவங்களில் சிறப்பானவை சிவபெருமான் ஆடிய ஆட்டங்களே என்றாலும் அவருடன் சேர்ந்து விநாயகரும், கண்ணனும், சரஸ்வதியும் ஏன் ஞானசம்பந்தருமே ஆடியிருக்கிறார்கள் அந்த வடிவங்களில் சிறப்பான ஒன்பதையே உங்கள் முன் நவதாண்டவம் என்ற பெயரோடு நிறுத்த முன்வருகிறேன். தமிழ்நாட்டுச் சிவன் கோயில்களில் எல்லாம் இருக்கும் வடிவம் ஆனந்தத் தாண்டவ திருஉருவம். அதனைப் பலதடவை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள். ஆதலால் அவ்வடிவினை இங்கு திரும்பவும் காட்ட நான் விரும்பவில்லை. அந்த நடராஜன் வடிவங்களிலே மிகவும் சிறப்பான ஒன்று வடஆர்க்காடு மாவட்டத்திலே ஆரணியை அடுத்த காமக் கூரிலே இருக்கிறது. இரண்டு காலையுமே தரையில் ஊன்றி ஆடும் தாண்டவக் கோலம் அது. அதுவே காளிகா தாண்டவம். அது சிறந்ததொரு செப்புப்படிமமாக இருக்கிறது.

இறைவன் ஆடிய ஆட்டங்களாலே தாளொன்றால் பாதாளம் ஊடுருலி, மற்றைத் தாளொன்றால் அண்டம்