பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

வேங்கடம் முதல் குமரி வரை

கடந்துருவி ஆடும் ஆட்டமே ஊர்த்துவ தாண்டவம். இந்தத் தாண்டவம் ஆடியது திருவாலங்காட்டிலே என்பர். தில்லையிலுள்ள இந்த ஊர்த்துவ தாண்டவர் ஒரு தனிக் கோயிலிலேயே இருக்கிறார். என்றாலும் இந்த வடிவம் சிறப்பாயிருப்பது திருச்செங்காட்டங்குடியிலே தான்.

அங்கு மிக்க கலை அழகோடு இந்த ஊர்த்துவ தாண்டவ வடிவினை சிறப்பாய் அமைந்திருக்கிறான் கல்லிலே. மார்க்கண்டனுக்காக, காலனைக் காலால் உதைத்து ஆடிய ஆட்டமே கால சம்ஹார தாண்டவம். இந்த வடிவம் சிறப்பாயிருப்பது திருக்கடையூரிலே, என்றாலும் அங்கேயுள்ள மூர்த்தியை தங்க அணிகளாலும், பட்டுத் துணிகளாலும் இன்னும் மாலைகளாலும் சிலைகளாலும் எப்போதும் பொதிந்தே வைத்திருப்பர்.

ஆதலால் தாண்டவ வடிவத்தின் அழகு முழுவதையும் கண்கொண்டு காணுதல் இயலாது. ஆனால் திருவீழிமிழலையிலே உள்ள நேத்திரார்பணேஸ்வரர் கோயிலில் ஓர் இருள் படிந்த பொந்திலே இந்த தாண்டவர் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறார். இவருடைய தாண்டவ வடிவங்களில் எண்ணற்றவைகளைக் காட்டக் கூடும் என்றாலும் இன்னும் ஒன்றே ஒன்றை மட்டும் காட்டுவதோடு இப்போது திருப்தி அடைகின்றேன்.

அவர்தான் திரிபுரத் தாண்டவர். சிரித்துப்புரம் எரித்த சேவகன் வடிவம் கல்லிலும் செம்பிலும் பல இடங்களில் உருவாகியிருந்தாலும், அழகான வடிவமாக அமைத் திருப்பது கும்பகோணத்திற்கு கிழக்கே 12 மைல் தூரத்திலே உள்ள கோனேரி ராஜபுரத்திலேதான். அங்