பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விளக்கமும் நன்றியும்

ங்கள் தந்தையார், திரு. தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்களைப் பற்றி, நான் வாசகர்களுக்கு அதிகம் சொல்ல வேண்டியதில்லை. கிருஷ்ணாபுரம் என்ற முதல் கட்டுரையைத் தொடர்ந்து, கோயில்கள் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகளில் எழுதியிருந்தாலும், தொடராக எழுத முனைந்தது கல்கி பத்திரிகையில் தான். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில், கல்கி ஆசிரியர் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், தமிழ் நாட்டுக் கோயில்களைப் பற்றிய கட்டுரைகள் கல்கியில் தொடர்ந்து வெளி வர ஆரம்பித்தன, காஞ்சிப் பெரியவர், பரமாச்சாரியர் தொண்டைமானவர்களை அழைத்து வரச்சொல்லி, தமிழ் நாட்டிலுள்ள, முக்கியமான 108 கோயில்களைத் தேர்ந்தெடுத்து எழுதும்படி ஆக்ஞாபித்திருக்கிறார். ஆனால் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி முடித்த போதோ, எண்ணிக்கையில் அவை 200ஐத் தாண்டிவிட்டன. அப்போது பரமாச்சாரியார் அவர்களைப் போய்த் தரிசித்த தொண்டைமானவர்களை, பெரியவாள் பெரிதும் பாராட்டி, இந்தக் கோயில்களை யெல்லாம் எழுதாமல் விட முடியாதுதான் என்றும் சொல்லியிருக்கிறார். விரைவிலேயே, ஒரு வித்வத் சதஸைக் கூட்டி, பொன்னாடை போர்த்தி, 'கலைமணி' என்ற பட்டத்தையும் சூட்டி கௌரவித்திருக்கிறார். இதைத் தந்தையாரவர்கள் பெருமையுடன் கூறிப் பெருமிதம் அடைவார்கள். தமிழ் நாட்டுக் கோயில்களின் எண்ணிக்கை 214க்குள் அடங்கி விடுமா என்ன? எழுதப்படாமல் விடுபட்டுப் போன கோயில்கள் எண்ணிறந்தவை இருப்பது தெரிய