பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வந்தது. அந்தக் கோயில்களுக்கும் சென்று, அதற்கான கட்டுரைகளை அவ்வப்போது, தினமணி சுடர் போன்ற பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றை இப்போது தேடினால் பெரும்பாலானவை கிட்டவேயில்லை. ஆகவே, கிடைத்த 19 கட்டுரைகளை மட்டும் தொகுத்து, வேங்கடம் முதல் குமரி வரை தொகுப்பின் ஐந்தாம் பாகமாக வெளியிட ஆசைப்பட்டேன், அன்பர்கள் பலரும் ஐந்தாம் பாகம் எப்போது வருகிறது? என்று கேட்டுக் கொண்டே இருக் கிறார்கள். அந்த ஐந்தாம் பாகத்தை வெளியிட இப்போதுதான் காலம் கனிந்து வந்திருக்கிறது. குருவாயூரப்பன், கொடுங்கோளூர் பகவதி, அஞ்சைக்களத்து அப்பன் ஆகிய கோயில்கள் எல்லாம் தமிழகத்தைச் சேர்ந்தவை அல்ல என்றாலும், தென்னகத்துக் கோயில்கள் தாமே? ஆகவே அந்தக் கோயில்கள் பற்றிய கட்டுரைகளும் இதில் இடம் பெறுகின்றன - மலையாளக் கரையோரமுள்ள கோயில்கள் பற்றியும் ஆந்திரத்துக் கோயில்கள் பற்றியும் எழுத வேண்டு மென்று தந்தையார் எண்ணியிருந்தார்கள். ஆனால் அதற்குள் இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டு விட்டான் அப்படி எழுதியிருந்தால் மேலும் இரண்டு சுவையான தொகுப்புக்கள், தமிழ் மக்களுக்குக் கிடைத்திருக்கும். இப்போதைக்கு, 'வேங்கடம் முதல் குமரி வரை' - 'வேங்கடத்துக்கு அப்பால்' இவற்றோடு மன நிறைவு கொள்ள வேண்டியிருக்கிறது.

தொண்டைமானவர்களைப் பற்றி, அவர்களுடன் நெருங்கிப்பழகிய இருவருடைய உரைகள் இந்த நூலை அணி செய்கின்றன, திரு.ஜி.ஸி. பட்டாபிராம் அவர்கள் தந்தையாரின் உழுவல் அன்பர் - பெரிய தொழிலதிபராக இருந்த போதிலும், கோயில்கள், கலைகள் இவற்றின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். தந்தையாருடன் சேர்ந்தும், தனித்தும் பல கோயில்களுக்குப் போய் வந்தவர். அதைப் பற்றி முடிந்த போதெல்லாம், கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பட்டாபி