பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

என்று நண்பர்களால் அன்போடு அழைக்கப்படும் அந்த நல்ல நண்பர், "நண்பர் பாஸ்கரனை“ பற்றிய தம்முடைய சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். முன்னுரை எழுதியுள்ள திரு. ஜகத்ரட்சகனை தொண்டைமானின் தொண்டர் என்றே சொல்லலாம். ரசிகர், சீடர் என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும். தொண்டைமானவர்களுடைய நூல்களைக் கையேடாகக் கொண்டு, நண்பர் குழாத்துடன் கோயில் கோயிலாக ஏறி இறங்கியிருப்பவர். இந்தக் கட்டுரைகள் நூலாக வருவதில் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் உடையவர். அவர் நல்லதொரு முன்னுரையை வழங்கியிருக்கிறார் - இவர்கள் இருவரைத் தவிர மற்றொரு முக்கியமான நபரும் இருக்கிறார். அவர்தாம், வித்வான் திரு ல. சண்முக சுந்தரம். ரசிகமணி டிகேசி அவர்களின் அன்புக்குப் பாத்திரமான சீடர். சிறந்த பேச்சாளர், தொண்டைமான் அவர்களுடைய வெளியிடப்படாத நூல்கள் வெளியிடப்படுவதற்கு, மிகுந்த அக்கறை காட்டி, கலைஞன் பதிப்பகத்தாருடன் தொடர்பு கொண்டு, நூல்களை நல்ல முறையில் வெளியிடுவதற்கு உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் செயல்படுகிறவர்.

இந்த நூலை, கலைஞன் பதிப்பக நூலாகக்கொண்டு வருவதில் ஆர்வம் காட்டியவர், பதிப்பகத்தின் நிர்வாகி, திரு. நந்தன் அவர்கள். இளைஞராக இருந்த போதிலும், உழைப்பும் உறுதியும் நிரம்பியவர். அவருடைய ஒத்துழைப்புடன், இந்த ஐந்தாம் பாகத்தை மிகுந்த அன்புடன் வழங்க முன்வந்திருக்கிறோம். முடிந்த வரை அந்தக் கட்டுரைகளுக்கான படங்களையும் தேடிப் பிடித்து இணைத்திருக்கிறோம் - மேற்கூறிய நால்வருக்கும் நாங்கள் நன்றி பாராட்டப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம் - தொண்டைமானவர்களுடைய பிற நூல்களும் தொடர்ந்து கலைஞன் பதிப்பக வெளியீடாக