பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை 5.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

85

என்னும் திருப்பதி வந்து சேருவோம். இங்கே கோயில் கொண்டிருப்பவர்தான் மகர நெடுங்குழைக்காதர். எல்லாத் திருப்பதிகளிலும் பெருமாளின் அங்க அழகை வைத்து புதுப்புதுப் பெயர் பூண்டு நிற்கும் பெருமாள் இத்திருப்பதியில் காதில் அணிந்திருக்கும் குழையையே தன் திருப் பெயராகத் தாங்கி நிற்கும் அழகுடையவராக இருக்கிறார். இங்குள்ள மூலவர் நிகரில் முகில்வண்ணன். இப்பெருமாளையும் குழைக்காதவல்லித் தாயாரையும் வணங்கி,

மகா நெடுங்குழைக்காதன் மாயன்
நூற்று வரை அன்று மங்க நூற்ற
நிகரில் முகில் வண்ணன் நேமியான்
என் நெஞ்சம் கவர்ந்தென்னை ஊழியாலே

என்ற நம்மாழ்வார் பாடலையும் பாடிவிட்டு, மேற்கு நோக்கி மூன்று மைல் நடந்தால் மதுரகவி ஆழ்வாரின் அவதாரத்தலமான திருக்கோளூர் என்னும் திருப்பதி வந்து சேருவோம்.

மதுரகவியாழ்வார் பெருமாளையே பாடவில்லை. அவர் கண்ட ஞானஒளி, வகுள பூஷண பாஸ்கரன் நம்மாழ்வார்தானே? அவரே அவருக்குத் தெய்வம் - எல்லாம். கோயில் சிறிய கோயில் தான் என்றாலும், அங்குள்ள பெருமாள் வைத்தமாநிதி. இவரும் கிடந்த திருக்கோலம் தான்.

உண்லும் சோறு பருகும் நீர்
தின்னும் வெற்றிலை.

- - -