பக்கம்:வேட்டை நாய்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

வேட்டை நாய்


“என்ன! நீ சொல்வது ஒன்றும் விளங்க வில்லையே!”

“இன்னும் கொஞ்ச நேரம் சென்றால், தானாக விளங்கிவிடும்!”

அரசர் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். பிறகு, “அப்படியானல், உன் பெயர்...?”

“என் பெயர் ஸெதாந்தா!”

“என்ன! என் தங்கை மகன் ஸெதாந்தவா!' என்று ஆச்சரியத்துடன் கூறிக்கொண்டே அவன் அருகே ஓடினார்; அவனை அப்படியே கட்டி அணைத்து முத்தமிட்டார்.

“ஸெதாந்தா, அம்மா சுகமாயிருக்கிறாளா? நீ எப்படி இங்கு வந்தாய்? நீ மட்டும்தான் வந்தாயா? அல்லது, அம்மாவும் வந்திருக்கிறாளா?” என்று படபடப்புடன் கேட்டார், அரசர்.

“நான் மட்டுமே வந்தேன். அம்மா ஊரில் இருக்கிறாள். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் காணவே இவ்வளவு தூரம் நடந்து வந்தேன். ஆணால், நானாக வந்து உங்களைக் காண்பதற்குள் உங்களுக்கு அவசரம்! சேவகர்களை அனுப்பி என்னை அழைத்துவரச் செய்துவிட்டீர்கள்!' என்று சிரித்துக் கொண்டே கூறினான், ஸெதாந்தா.

இதைக் கேட்டதும், அரசருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. சேவகர்கள் ஆச்சரியத்துடன் ஸெதாந்தாவையும் அரசரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே நின்றனர்.

உடனே அரசர், ஆவலாகத் தம்முடைய பிள்ளைகளை அழைத்தார். “இதோ பாருங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/16&oldid=499321" இலிருந்து மீள்விக்கப்பட்டது