பக்கம்:வேட்டை நாய்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேட்டை நாய்

23

 விட்டது. ஸெதாந்தா திரும்பவும் நாலைந்து அடிகள் கொடுத்தான். பிறகு வாலைப் பிடித்துப் ‘பரபர’ என்று இழுத்தான். அப்புறமும் அந்த நாய் பிழைத்திருக்குமா, என்ன? அதன் மூச்சு நின்று விட்டது!

“ஆயுள் முடிந்தது!” என்று குதூகலத்துடன் உரக்கக் கத்தினான் ஸெதாந்தா. அந்தச் சப்தம் உள்ளே விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் காதுகளில் அரைகுறையாக விழுந்தது. உடனே அரசருக்கு ஸெதாந்தாவைப் பற்றிய நினைவு வந்தது. “ஐயோ! என் தங்கை மகன் வருவதாகச் சொன்னானே! ஒரு வேளை அவனைத்தான் வேட்டை நாய் கடித்து விட்டதோ!” என்று கூறிக்கொண்டே வாயிலை நோக்கி ஓடினார். அவரைத் தொடர்ந்து பிரபுவும், மற்றும் சிலரும் ஓடினார்கள்.

வெளியே வந்ததும், வெற்றி முழக்கத்துடன் நிற்கும் ஸெதாந்தாவை அவர் கண்டார்; அவன் பக்கத்திலே செத்துக் கிடக்கும் வேட்டை நாயையும் கண்டார். உடனே அவர் ஒடிப்போய் ஸெதாந்தாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு, “நல்லவேளை; நீ பிழைத்தாய்” என்றார்.

“இல்லை. கெட்ட வேளை; என் நாய் செத்து விட்டது!” என்று வருத்தத்துடன் கூறிக் கொண்டே நாயின் அருகே ஓடினார், பிரபு. அது மூச்சின்றிக் கிடப்பதைக் கண்டார்; பெருந்துயர் அடைந்தார்.

பிரபுவின் வருத்தத்தை உணர்ந்தான் ஸெதாந்தா. உடனே அவர் அருகிலே ஓடினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/25&oldid=500579" இலிருந்து மீள்விக்கப்பட்டது