பக்கம்:வேட்டை நாய்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

வேட்டை நாய்

 “அரசே, என் நண்பன் பிழைக்கட்டும். அவனுக்காக நான் உயிர் விடுவதைப் பெருமையாகவே நினைக்கிறேன். அவன் உத்தமன்; உண்மையே உரைப்பவன்; வீரன், தேச பக்தன். இந்த அற்பனின் உயிரைக் காட்டிலும் அவனு டைய உயிர் ஆயிரம் மடங்கு மேலானது. மகிழ்ச்சியோடு நான் தூக்கு மேடைக்குச் செல்கிறேன்.”

“செல்ல வேண்டியதுதான்! இனிமேல் அவன் வரப்போவதே இல்லை.”

“இல்லை, வந்துவிட்டேன்!” என்று அப்போது ஒரு குரல் கேட்டது.

அரசன் நிமிர்ந்து பார்த்தான். நண்பன் திரும்பிப் பார்த்தான். ஊருக்குச் சென்ற கைதி திரும்பி வந்துவிட்டான்! அவனைக் கண்டதும் அரசன் ஆச்சரியப்பட்டான்.

வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்த அவன், நண்பனை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டான்.

“நண்பா, நல்லவேளை! கடவுள் கருணை வைத்தார்; சமயத்திற்கு வந்துவிட்டேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினான்.

“இப்பொழுது நீ ஏன் வந்தாய்? இன்னும் அரைமணி நேரம் கழித்து வரக்கூடாதா? ஐயோ! உன்னைத் தூக்கில் போட்டுவிடுவார்களே! அருமை நண்பா! ஏன் வங்தாய்?”

“ஏன் வந்தேனா? என் சொல்லைக் காப்பாற்ற வந்தேன்; உன் உயிரைக் காப்பாற்ற வந்தேன். நண்பா, எனக்குப் பதிலாக நீ சிறையிலே இருபத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேட்டை_நாய்.pdf/38&oldid=502487" இலிருந்து மீள்விக்கப்பட்டது