பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

101

மாநாட்டுத் தீர்மானத்தைப் படித்து விளக்கினார். (சொற்பொழிவு மற்றொரு பக்கத்தில் வெளியிடப் பெற்றுள்ளது) மொழியும் இனமும் பிரிக்கப்பட முடியாதவை என்றும்; எனவே தமிழ்மொழி, குமுகாய விடுதலை மாநாடு என்று இணைத்துப் போட்டதாகவும் இவ்வுண்மையை உணராத திராவிடர் கழகத்தினர் இனத்திற்காக மட்டுமே பாடுபடமுயல்கின்றனர்; மொழியை அறவே விட்டு விடுகின்றனர்; மொழி நிலையில் ஏற்படும் தாழ்வால் இனம் எப்படித் தாழ்கிறது என்பதை அவர்கள் உணராமல் இருக்கின்றனர். என்றும்; தனித்தமிழ் இயக்கம் எப்படி எப்படிக் குமுகாய விடுதலைக்கு அடிப்படையாய் இருக்கிறதென்றும் விளக்கினார்கள். குமுகாய மாநாட்டுத் தீர்மானத்தை (வேறொருபக்கத்தில் வெளியிடப் பெற்றுள்ளது.) விளக்கும்முன்னர் மற்ற மாநாடுகளில் போலன்றித் தீர்மானத்தில் குறிக்கோளுடன் செயல் திட்டமும் கொடுக்கப் பெறும் சிறப்பைச் சொன்னார்கள். செயல் திட்ட முழு விளக்கத்தை அரசியல் மாநாட்டின் முடிவில் அறிவிப்பதாகச் சொன்னார்கள் மொழி குலமத விடுதலைக்குத் தடையாக இருக்கும் ஆரியப்பார் பனரைத் தீர்மானத்தில் குறிக்கப் பெற்ற வேண்டுகோள் காலத்திற்குள் திருந்தி விடுமாறு எச்சரிதும், அதே போல் இந்திய அரசை எவ்வத்துறையில் விடுதலை இயக்க மறவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கூறித் தமிழகத்தை விடுதலை நாடாக அறிவிக்குமாறு கடுமையாக எச்சரித்ததும் வீறுரை ஆற்றினார்கள். எல்லாப் பேச்சுகளையும் நடுவணரசு ஒற்றர்கள் எழுதிக் கொண்டனர். மாநாட்டரங்கினுள்ளும், வெளியேயும் நின்றுக் கொண்டிருந்த காவலர்களும், பாவலரேற்றின் உணர்வழுத்த உரையால் கட்டப்பெற்றிருக்காமல் இருந்திரார் என்றே சொல்லல் வேண்டும். மாநாட்டு வாயிலில் கொட்டை எழுத்துகளில் ஒட்டப்பெற்றிருந்த விடுதலை முழக்கச் சுவரொட்டிகளைக் கண்டும், சொற்பொழிவைக் கேட்டும் மாநாட்டில் பார்வையாளர் வரிசையில் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தது. பாவலரேறு பேசி முடித்தபோது இரவு மணி 8-00. அப்போது இரவு உணவுக்காக அனைவரும் கலைந்து சென்றனர்.

பின் வெங்காளூர் திரு. அறவாழி எழுதி, இயக்கி, நடத்திய 'எந்நாளோ?’ என்னும்நாடகம் (தமிழக விடுதலைக்) கொள்கை நடிக்கப்பெற்றது. அந்நாடகத்தில் ஒன்றிரண்டு அயற் சொற்கள் கலந்து உரையாடல் எழுதப்பெற்றிருப்பினும்