பக்கம்:வேண்டும் விடுதலை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

103

நல்லுணர்வு ஊட்டி வளர்ப்பதுடன் தம் பிள்ளைகளைத் தமிழக விடுதலைக்கு உழைக்க அணியமாக்கி நாட்டுக்குக் கொடுக்க முன்வரவேண்டுமென்றும்; அத்துடன் தாமும் எந்தெந்த நிலைகளில் பாடுபட முடியுமோ அந்தந்த நிலைகளில் பாடுபட்டுத் தாமும் தம் குடும்பமும் பெருமையுற வழிவகை செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டனர். நண்பகல் இடை நேரத்தில் பெகும்ப கல்லா திரு. நா. இளமாறன் தமிழியக்கப் பாடல்கள் சில பாடினார்.

இறுதியாக அரசியல் அரங்கம் தொடங்கியது. அதற்குத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு மாநாட்டு அமைப்பாளர் சார்பில் திரு. க. வெ. நெடுஞ்சேரலாதன் நான்காண்டுகள் தொடர்ந்து திரைப்படம் பார்க்காத அன்பர் யாரேனும் உளரா என்று கேட்டார் யாரும் வரவில்லை. சிலர் வந்து ஆறாண்டு ஏழாண்டுகள் பார்க்காமல் இருந்து அண்மையில் ஒரு படம் பார்த்ததாகக் கூறினர். இறுதியில் இரண்டரை ஆண்டுகளாகத் தொடர்ந்து திரைப்படம் பார்க்காத திருவாரூர் அன்பர் திரு. வை. தமிழ்க்குமரன் தலைவராக அமர்த்தப் பெற்றார். திருவாளன்மார் இரா. மெய்யறிவன், கந்த. கண்ணன், தமிழநம்பி, மு. மகிழரசன், இரும்பொறை திருக்குறள் பெருமாள், இரா. அருட்குவை, க.வெ. நெடுஞ்சேரலாதன், மறை. நித்தலின்பனார் ஆகியோர் தத்தம் பாணியில் தமிழக விடுதலைபற்றி வலியுறுத்தித் தம் உணர்வு கனலும் உள்ளங்களை வெளிக்காட்டினர். திருவாட்டி கோன். பாப்பா அரசியலில் மகளிர் பங்குபற்றி உரையாற்றினார்.

கடைசியாக மாநாட்டு அமைப்பாளர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குமுகாய மாநாட்டில் பேசியது போல் உணர்வு கொளுத்தும் உரையாற்றித் தமிழக விடுதலைத் தீர்மானத்தையும் செயன்முறையையும் படித்துக்காட்டிச் செயல் திட்டத்தை விளக்கினார்கள்.

“நேற்றைய மாநாட்டு ஊர்வல, நிகழ்ச்சிகள் பற்றி எந்தத் தமிழ்த் தாளிலும் ('இந்தியன் எக்சுபிரசு' ஏட்டில் சுருக்கமாகச் செய்தி வந்திருந்தது) செய்தி வெளிவராதது பற்றி அன்பர்கள் குறைபட்டுக் கொண்டதாகக் கேள்விப்பட்டேன்; அவர்கள் தனித்தமிழ்நாடு கேட்ட ஆதித்தனாரின், 'தினத்தந்தி’யிலும் செய்தி வராதது பற்றிச் சொன்னார்கள்” என்று கூறி யாரும் எதற்கும் குறைப்படவோ, கவலைப்படவோ வேண்டியதில்லை என்றும் தினத்தந்தி ஒரு செய்தித்தாளே அன்று என்றும்